விஜயகுமார் வீட்டில் திடீர் பங்க்ஷன்.. கேக் வெட்டி கொண்டாடிய அருண் விஜய்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகளான அனிதா விஜயகுமாரின் மகன் பிறந்தநாள் நேற்று அவருடைய வீட்டில் கொண்டாடப்பட்டிருக்கிறது. அப்போது விஜயகுமார் குடும்பத்தினர் எல்லோரும் கலந்து கொண்டு புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருக்கின்றனர். இது இணையத்தில் அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகளான அனிதா விஜயகுமார் டாக்டராக வெளிநாட்டில் பணியாற்றி வந்தார். விஜயகுமாருக்கு இரண்டு மனைவி என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். மூத்த மனைவியான முத்து கண்ணுவிற்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என்ற மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் முத்துக்கண்ணுவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்திருந்தார்.

அதற்குப் பிறகு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். அவருக்கு வனிதா, பிரித்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் வனிதா தவிர மீதம் உள்ள எல்லோரும் ஒரே குடும்பமாக ஒற்றுமையாக இருக்கிறார்கள். விஜயகுமார் வீட்டில் எந்த பங்க்ஷன் என்றாலும் எல்லோரும் கலந்து கொண்டு விதவிதமான புகைப்படங்களை எடுத்து வெளியிடுவது வழக்கம்.
விஜயகுமார் வீட்டில் அவருடைய இரண்டாவது மகள் அனிதாவை தவிர மீதம் உள்ள அனைவரும் நடிகர்களாகத்தான் இருக்கிறார்கள். வனிதாவின் மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரி விஜயகுமாரின் பாதுகாப்பில் அவருடைய தந்தை ஆகாஷுடன் வாழ்ந்து வருகிறார். அவரும் இப்போது நடிகராக மாறி இருக்கிறார். விஜயகுமாரின் மகளான அனிதா டாக்டருக்கு படிக்கும்போது அவரோடு படித்தவறை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அனிதா விஜயகுமாருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் அவர்களும் மருத்துவர்களாக இருக்கின்றனர். மூத்த மகள் தியாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருந்த அனிதா சமீபத்தில் தான் சென்னையில் புது வீடு வாங்கி குடியேறி இருந்தார். தன்னுடைய மகள் கல்யாணத்தையும் சென்னையில் வைத்து நடத்தி இருந்தார். அதுபோல பல வருடங்களாக அவசர சிகிச்சை பிரிவில் வேலை பார்த்து வந்த நிலையில் இப்போது அந்த பணியில் இருந்து விலகி இருக்கிறார்.
அதனால் சமூக வலைத்தளத்தில் அனிதா செம ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அனிதா நேற்று தன்னுடைய மகனின் பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். தன்னுடைய மகனின் 24 வது பிறந்தநாளை அனிதா வீட்டில் எளிமையாக கொண்டாடி இருக்கிறார். அப்போது விஜயகுமார் குடும்பத்தினர் மற்றும் அருண் விஜய் குடும்பத்தினர் எல்லோரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அதுபோல அனிதா வீட்டில் நவராத்திரி பண்டிகைக்காக கொலு வைக்கப்பட்டிருக்கிறது. அப்போது பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த புகைப்படங்களையும் அனிதா தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் திடீரென ஹார்ட் அட்டாக் வந்து விட்டால் என்னவெல்லாம் செய்யலாம், எதை எல்லாம் செய்யக்கூடாது போன்ற பல பயனுள்ள தகவல்களையும் தொடர்ந்து அளித்து வருகிறார். இதய நோய்க்கு மட்டுமல்லாமல் பல உடல் நிலை பிரச்சனைகளுக்கும் அனிதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் விளக்கம் கொடுத்து வருகிறார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications