நேற்று கல்யாணம் இன்று செம பதிவு..! விஜயகுமாரின் பேத்தி செய்த நெகிழ்ச்சி.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான விஜயகுமார் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே விஜயகுமார் குடும்ப பங்க்ஷன் பற்றிய விஷயங்கள் தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் மகள் தியாவின் திருமணம் மற்றும் அதை சார்ந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் மணப்பெண்ணான தியா தன்னுடைய திருமணத்திற்கு பிறகு தன்னுடைய ஃபங்ஷனில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் க்யூட்டான வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடிகர் விஜயகுமார் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக நடித்து சினிமாவில் அறிமுகமாகி அதற்குப் பிறகு 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதிலும் மிகவும் கௌரமான கேரக்டரில் நடித்து மக்களின் மனதை கவர்ந்த விஜயகுமார் முத்துக்கண்ணு என்ற பெண்ணை திருமணம் செய்து அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு பிறகு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த வகையில் முதல் மனைவிக்கு பிறந்த நடிகர் அருண் விஜய் மற்றும் இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, ஸ்ரீதேவி என்ற பெண்களும் உள்ளனர்.

இந்த நிலையில் விஜயகுமாரின் மகள் அனிதாவின் மகளான தியாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகை ஸ்ரீதேவி, நடிகை ப்ரீத்தா, அனிதா, விஜயகுமார் பேரன் பேத்திகள் என்று ஒட்டுமொத்தமாக குடும்பத்தோடு இந்த பங்க்ஷனில் கொண்டாடி மகிழ்ந்திருந்தனர். அதுபோல பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அந்த வகையில் நடிகர் ரஜினி நேரில் சென்று மணமக்களை ஆசீர்வாதம் செய்திருந்தார். அப்போது அங்கு எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று திருமணம் நடைபெற்று இருந்த நிலையில் இன்று மணப்பெண்ணான தியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்கள் மற்றும் கியூட்டான வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் தன்னுடைய கணவர் திருமண மண்டபத்திற்கு வருவதற்கு முன்பு காரில் வந்து கொண்டிருக்கும்போது டான்ஸ் ஆடிய க்யூட்டான வீடியோக்கள் இடம்பெற்றிருக்கிறது. அதுபோல தன்னுடைய சித்திமார்கள் மற்றும் மாமா ஆகியோரோடு தியா டான்ஸ் ஆடிய வீடியோவையும் அதில் பகிர்ந்து இருக்கிறார். அதுபோல தன்னுடைய பாட்டியான முத்து கண்ணு மற்றும் தன்னுடைய தாத்தா விஜயகுமார் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் க்யூட்டான வீடியோக்களையும் அதில் பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வீடியோக்களில் விஜயகுமார் பேசுவதை கேட்டு முத்து கன்னு அழகாக வெட்கப்பட்டு இருக்கிறார். அது அதில் இடம்பெற்றிருக்கிறது. இந்த வீடியோவிற்கு தியா இந்த நினைவுகள் எப்போதும் மறக்காது என்று அதற்கு கேப்ஷனும் கொடுத்திருக்கிறார். அதுபோல இன்னொரு வீடியோவில் நடிகர் அருண் குமார் தன்னுடைய அக்கா மகளின் கையை பிடித்துக்கொண்டு மணமேடைக்கு அழைத்து வரும்போது மணப்பெண்ணான தியா கண்கலங்கி இருக்கிறார்.
அந்த க்யூட்டான மூமெண்டும் அதில் இடம்பெற்று இருக்கிறது. இப்படியாக பல வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தியா பகிர்ந்து இருக்கும் நிலையில் இதற்கு அதிகமான லைக்கள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் மணப்பெண்னான தியாவின் அம்மாவும் நடிகர் விஜய் குமாரின் மகளுமான அனிதா கூலி திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாக நடித்தவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications