நடிகர் விஜயகுமார் பேரனா இது! மருத்துவர் ஆனதும் வெளியிட்ட முதல் வீடியோ... குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகளான அனிதாவின் மகன் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நடிகர் விஜயகுமார் வீட்டில் எல்லோரும் நடிகர்களாக இருக்கும் நிலையில் அவருடைய இரண்டாவது மகள் அனிதா மட்டும் தான் சினிமாவை தவிர்த்து விட்டு டாக்டராக மாறி இருந்தார்.
அனிதாவைப் போலவே அவருடைய கணவர் கோகுலும் மருத்துவர்தான். இருவரும் படிக்கும் போது காதலித்து இருவர் வீட்டிலும் சம்மதத்தை பெற்று திருமணம் செய்திருந்தனர். இவர்களுக்கு தியா என்ற மகளும் ஸ்ரீ ஜெய் என்ற மகனும் இருக்கின்றனர். அதில் தியாவிற்கு சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக திருமணம் முடிவடைந்தது. தியாவும் மருத்துவராக இருக்கும் நிலையில் அவர் தன்னோடு படித்த தீலன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தில் வெள்ளித்திரை, சின்னத்திரை என பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இவர்களுடைய திருமணம் அதிகமாக இணையத்தில் பேசப்பட்டது. அதுபோல இவர்களுடைய திருமண புகைப்படமும் இணையத்தில் அதிகமாக பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் அனிதாவின் இரண்டாவது மகன் ஸ்ரீ ஜெய் சமீபத்தில் டாக்டர் படிப்பை முடித்திருக்கிறார்.
அது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் வெளியிட்டிருந்தார். அப்போது என்னுடைய கனவு நிறைவேறியது என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். அதுபோல தன்னுடைய இன்ஸ்டாகிராம் ப்ரொபைலில் ஸ்டுடென்ட் என்று இருந்த வார்த்தையை ஐ அம் டாக்டர் என்று மாற்றியிருந்தார். அதுபோல தன்னுடைய தம்பி ஸ்ரீ ஜெய் படிப்பை முடித்து டாக்டராக மாறியதற்கு தியாவும் வாழ்த்துக்கள் கூறி, டாக்டர் குடும்பத்திற்கு புதிய ஒரு டாக்டர் இணைந்திருக்கிறார்.
அடுத்த கல்யாணம்!? அதிரடியாக போஸ்ட் போட்ட நடிகை வனிதா விஜயகுமார்.. இப்படி ஓப்பனா சொல்லிட்டாங்க!
என்னுடைய தம்பியை டாக்டராக வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். அதுபோல விஜயகுமாரின் மகளான அனிதாவும் தன்னுடைய மகன் குறித்து பெருமிதமாக பகிர்ந்து இருந்தார். இப்படியான நிலையில் ஸ்ரீஹரி முதல் முறையாக மருத்துவர் உடையில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நடிகர் விஜயகுமார் மகள் மற்றும் மகன் அனைவருமே நடிகர்களாக இருக்கும்போது அனிதாவிற்கு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் நடிப்பை மறுத்துவிட்டு படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்து இவர் சாதித்து காட்டியிருக்கிறார். இப்போது அனிதாவின் மகன் மற்றும் மகளும் அதையே பின் தொடர்ந்து டாக்டர்களாக மாறி இருக்கின்றனர்.

இதுவரைக்கும் விஜயக்குமாரின் குடும்பத்தினர் நடிகர்கள் என்று அனைவரும் கூறி வந்த நிலையில் இப்போது அவர்களுடைய குடும்பத்தில் டாக்டர்கள் உருவாகி கொண்டிருக்கிறார்கள் என்று அவருடைய ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அதுபோல நடிகர் விஜயகுமாருக்கு முத்து கண்ணு என்ற மனைவி இருக்கும் நிலையில் அவருக்கு கவிதா, அனிதா, அருண் குமார் என்ற மூன்று பேர் இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் முத்துக்கண்ணுவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பிறகு மஞ்சுளாவிற்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்கள் பிறந்திருந்தனர். பிறகு முத்துக்கண்ணு மற்றும் மஞ்சுளாவோடு விஜயகுமார் ஒரே குடும்பமாக சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மஞ்சுளா திடீரென்று உடல்நிலை குறைவினால் காலமானார். அதற்கு பிறகு விஜயகுமாரின் இரண்டு மனைவிகளின் குழந்தைகளும் ஒற்றுமையாக இருக்கின்றனர். ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக நடிகை வனிதா மட்டும் அவர்களுடைய குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications