வரலட்சுமியின் ஃபங்ஷன்.. சரத்குமார், ராதிகாக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜயகுமார் மகள்.. இவருமா?
சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி திருமணம் இன்று தாய்லாந்தில் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று அவருடைய ரிசப்ஷன் சென்னையில் நடைபெற்று இருக்கிறது. அப்போது பல திரை பிரபலங்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் நடிகர் விஜயகுமாரின் மகள் அந்த ஃபங்ஷனில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
நடிகர் சரத்குமார் சினிமா துறையில் பிரபலமாவதற்கு முன்பே நடிகை சாயாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். ஆனால் சரத்குமாருக்கு சாயாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரத்குமார் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தான் இரண்டாவது திருமணம் செய்தாலும் தன்னுடைய முதல் மனைவியின் குழந்தைகளின் மீதும் அதிகமான பாசம் வைத்திருக்கும் சரத்குமார் உடன் அவருடைய மகள்கள் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வெளியிடுவது வாடிக்கையாக இருக்கிறது. ஆரம்பத்தில் தனக்கும் ராதிகாவிருக்கும் சில மனக்கசப்புகள் இருந்ததாக வரலட்சுமி பேட்டிகளில் பேசி இருக்கிறார். ஆனால் இப்போது ராதிகாவை புரிந்து கொண்டதாகவும் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் கூட கூறியிருக்கிறார்.
வரலட்சுமி வெளிநாட்டில் படித்து இருந்தாலும் நடிகையாக வேண்டும் என்று முயற்சி எடுத்தபோது ஆரம்பத்தில் சரத்குமார் அதற்கு தடை விதித்ததாகவும் கூறப்படுகிறது. பிறகு அவருடைய சம்மதத்தோடு போடா போடி திரைப்படத்தின் மூலமாக வெள்ளி திரையில் அறிமுகமானார். முதல் திரைப்படம் பெரிய அளவில் அவருக்கு வெற்றி கொடுக்கவில்லை என்றாலும் அவருடைய அறிமுகம் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து தாரை தப்பட்டை படம் வரலட்சுமியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது.
இப்போது தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் தன்னுடைய அப்பாவை போலவே கம்பீரமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மும்பையில் தொழிலதிபரான நிக்கோலாய் சச்சுதேவ் என்பவரை காதலித்து வந்த வரலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு இரு விட்டாரின் சம்மதத்தோடு திடீரென எங்கேஜ்மென்ட் செய்து கொண்டார்.

நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கும் நிலையில் அவருடைய முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்த பிறகு வரலட்சுமியும், நிக்கோலும் காதலித்து வந்திருக்கிறார்கள். இப்போது அவர்களுடைய காதல் கல்யாணத்தில் கைகூடி இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு இருந்து சரத்குமாரின் குடும்பத்தினர் பல திரை பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் பலருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து வந்தனர்.
அதுபோல சில நாட்களாகவே இவர்களுடைய வீட்டில் திருமண கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. முதல் நாள் மெஹந்தி பங்க்ஷனில் தொடர்ந்து ரிசப்ஷன் நடைபெற்றது இன்று நிக்கோலாய் மற்றும் வரலட்சுமி திருமணம் தாய்லாந்தில் நடக்கிறது. இந்த திருமணத்தில் இரண்டு குடும்பத்தினரின் உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள். திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே திருமணத்தை ஒட்டி நேற்று மற்றும் முன் தினம் நடந்த கொண்டாட்டத்தில் பல பிரபலங்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அதில் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகளான அனிதா தன்னுடைய குடும்பத்தோடு கலந்து கொண்டிருக்கிறார். அப்போது சரத்குமார் மற்றும் ராதிகாவோடு எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு நடிகர் பிரபு, மீனா, திரிஷா, பிரபுதேவா என்று பல பிரபலங்களோடு அனிதா புகைப்படங்கள் எடுத்து இருந்த நிலையில் அந்த புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

அதுபோல அந்த புகைப்படங்களுக்கு வரலட்சுமி மற்றும் நிகோலாய் தம்பதியை வாழ்த்தி ஒரு கேப்ஷனும் அனிதா கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications