என் வாழ்க்கை சீரழிய காரணமே எங்க அப்பா தான்.. அவங்க பேச்சைக் கேட்டதால் வந்த வினை.. வனிதா எமோஷனல்
சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா தன்னுடைய அப்பாவான விஜயகுமாரால் தன்னுடைய வாழ்க்கை சீரழிந்து போனது என்றும் அவருடைய பிள்ளைகளில் நான் மட்டும்தான் அவருடைய பேச்சை கேட்டேன், ஆனால் அவர் என்னை பற்றி பேசவில்லை என்று சில வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோ இப்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் நடிகர் விஜயகுமார் பேட்டி ஒன்றில் தன்னுடைய மகள்கள் மற்றும் மகன் குறித்து பேசும் போது தன்னுடைய பெயரை மட்டும் அதில்
சொல்லவில்லை என்பதை சுட்டிக்காட்டி அதனால் தனக்கு இருந்த ஆதங்கத்தை வனிதா அந்த பேட்டியில் கொட்டி இருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த அளவில் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இப்போது சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை வனிதா பற்றி இணையத்தில் பலருக்கும் தெரிந்திருக்கும். வனிதாவின் திருமண வாழ்க்கை மற்றும் குடும்ப பிரச்சனைகள் திறந்த புத்தகமாக அவரை பாலோ பண்ணும் ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். சில வருடங்களுக்கு முன்பு வனிதா மற்றும் அவருடைய குடும்பத்தினர் சண்டை பெரிய அளவில் பூகம்பமாக செய்தி சேனல்களில் வெடித்துக்கொண்டிருந்தது.
அதைத் தொடர்ந்து வனிதா இப்போது தன்னுடைய குடும்பத்தை பிரிந்து தன்னுடைய இரண்டு மகள்களையும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் வனிதா தன்னுடைய அப்பா குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் வனிதா பேசுகையில், என்னுடைய அப்பா சமீபத்தில் ஒரு பேட்டியில் என்னுடைய மகள்கள் எப்படி என்று ஒவ்வொருவர் பேரையும் சொல்லி சொல்லி இருந்தார்.
அதில் கவிதா, அனிதா, அருண் விஜய், அடுத்ததாக என் பெயரை சொல்லாமல் பிரீத்தா, ஸ்ரீதேவி என்று பேசி இருக்கிறார். நான் அந்த வீடியோவை குறைந்தது பத்து முறையாவது படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி பார்த்த வீடியோவை பார்த்துக் கொண்டிருப்பது போல பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் என்னுடைய அப்பா என்னுடைய பேச்சை கேட்ட பிள்ளைகள் என்று என் பெயரை தவிர மிச்சம் உள்ள எல்லார் பெயரையும் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவர் வேண்டுமென்றால் என்னை பிள்ளை இல்லை என்று சொல்லலாம், என் பெயரை பேசாமல் விடலாம்... ஆனால் உலகம் அதை சொல்லாது. நான் எப்போதும் அவருடைய பிள்ளை தான். நல்லவேளையாக எனக்கு கல்யாணம் முடிந்த புதிதில் நான் என்னுடைய பெயரை என்ன மாதிரி குறிப்பிட வேண்டும் என்று கேட்டபோது நான் வனிதா விஜயகுமார் என்று சொல்லிவிட்டேன். அதனால் தான் இப்போதும் எப்போதும் என்னுடைய பெயர் அதுவாகவே இருக்கிறது.
ஒருவேளை நான் முதல் கல்யாணம் முடியும்போது வனிதா ஆகாஷ் என்று வைத்திருந்தால் தொடர்ந்து எத்தனை முறை என்னுடைய பெயர் மாறியிருக்கும்..? என்று சிரித்தபடியே வனிதா அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதோடு உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய அப்பா பேச்சை கேட்ட பிள்ளை என்றால் அது நான் மட்டும்தான். அவரால் தான் என்னுடைய வாழ்க்கை சீரழிஞ்சு போச்சு.
என்னுடைய வாழ்க்கை எப்படியோ இருந்திருக்கும் அவருடைய பேச்சை கேட்டதால் தான் என்னுடைய வாழ்க்கையை இந்த நிலைமைக்கு மாறி இருந்தது என்று அந்த பேட்டியில் வனிதா பேசியிருக்கையில் இது சில வருடங்களுக்கு முன்பு உள்ள வீடியோவாக இருந்தாலும் இப்போது விஜயகுமார் வீட்டில் நடந்த திருமணத்தில் வனிதாவை அவர்கள் கூப்பிடாமல் ஒதுக்கி வைத்திருந்த நிலையில் இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications