என் மகள் வித்யா சாகல.. மீண்டும் வந்தாச்சு! கண்கலங்கிய விஜயின் அம்மா ஷோபா.. நெகிழ வைத்த வார்த்தை
சென்னை: நடிகர் விஜயின் சகோதரி வித்யா சிறுவயதிலேயே இறந்து போயிருந்த நிலையில் சமீபத்தில் விஜயின் அம்மா ஒரு குழந்தையை பார்த்து, என்னுடைய மகள் வித்யா போலவே இருக்கு என்று கண்கலங்கி இருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
வெளியே சிரித்தபடி பிரபலமாக இருக்கும் பலருடைய வாழ்க்கையில் மறுபக்கம் வருத்தங்கள் நிறைந்ததாகவும் வெளியே சொல்லாத வேதனைகள் அடங்கியதாகவும் தான் இருக்கும். அந்த மாதிரி தான் தளபதி என்று செல்லமாக தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படும் விஜயின் வாழ்க்கையில் இருக்கிறது.

அவர் சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்பவும் அமைதியாக இருப்பார் என்று அவரோடு நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் எல்லோருமே சொல்வார்கள். விஜய் ரொம்பவே ஸ்வீட்டானவர் ஆனால் யாரிடமும் அதிகமாக பேச மாட்டார் என்று சொல்வார்கள். அதற்கு காரணம் கூட அவருடைய சகோதரியின் திடீர் மரணம் தான் விஜய்யை இப்படி மாற்றியது என்று கூட சில வருடங்களுக்கு முன்பு அவருடைய சித்தி சீரியல் நடிகை ஷீலா ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
ஷீலா பத்தாம் வகுப்பு படிக்கும் போது தன்னுடைய அக்கா ஷோபாவிற்கு விஜய் பிறந்தார். அவரை நான் என்னுடைய குழந்தை போல தான் பார்த்துக் கொண்டேன். அவரை எனக்கு ரொம்பவே பிடிக்கும். நாங்கள் சூட்டிங் பார்க்க போகும் போதெல்லாம் விஜய் எங்களோடு வருவார். பக்கத்தில் நின்று அமைதியாக ஷூட்டிங் பார்த்துக் கொண்டிருப்பார் ஆனால் இப்போது விஜய் இவ்வளவு அழகாக நடிப்பார் இப்படி டான்ஸ் ஆடுவார் என்று எல்லாம் எங்களுக்கு அப்போது தெரியாது என்று கூட பேசி இருந்தார்.
அதே நேரத்தில் விஜய்க்கு அவருடைய தங்கை வித்யா தான் ரொம்பவும் பிடிக்கும். ஆனால் வித்யா உடல்நிலை குறைபாட்டால் உயிரிழந்ததை விஜய்யால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்கையை நினைத்து ரொம்பவே வருத்தப்படுவான். இப்போதும் விஜய்க்கு அவருடைய தங்கை நினைவுகள் அதிகமாக இருக்கிறது என்று ஷீலா பேசியிருந்தார்.

இந்த நிலையில் விஜய்யின் அம்மா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து இருக்கிறார். அப்போது அங்கு ஒரு ரசிகர் தங்களுடைய குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று குழந்தையை அவர்களிடம் கொடுக்க அந்த குழந்தையை பார்த்ததும் கண்கலங்கிய ஷோபா இது என்னுடைய மகள் வித்யா போலவே இருக்கிறது. இந்த குட்டி பாப்பாவை போலவே தான் என் மகள் வித்யாவும் இருப்பாள் என்று கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து நிற்கும் போது வித்யா என்று அந்த குழந்தைக்கு பெயர் வைத்திருக்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதோடு இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் விஜயின் தங்கச்சி சாகவில்லை மீண்டும் பிறந்து அவரிடம் வந்து சேர்ந்திருக்கிறார். விஜய்க்கு தங்கச்சி பிறந்தாச்சு என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications