ஜெயம் ரவி சொல்றது உண்மைதான்.. வெளிநாட்டில் நடந்த “அந்த” சம்பவத்தை ஏற்கனவே பகிர்ந்த விக்ரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி வீட்டில் தனக்கு மரியாதையே இல்லை தனக்குன்னு ஒரு பேங்க் அக்கவுண்ட் கூட கிடையாது, ஆரம்பத்தில் நன்றாக போய்க் கொண்டிருந்த எங்களுடைய திருமண வாழ்க்கையில் பிறகு நான் வேலைக்காரரை விட மோசமாக நடத்தப்பட்டேன் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் விக்ரம் ஜெயம் ரவியின் நிலைமை குறித்து ஏற்கனவே பேசிய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தற்போது சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து பிரச்சனை பேசப்பட்டு வருகிறது. 90's கிட்ஸ்களின் ஃபேவரிட் நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி இப்போது அவருடைய விவாகரத்து விஷயத்தை வெளிப்படையாக போட்டு உடைத்தது தான் பெரிய அளவில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. தான் விவாகரத்து செய்யப்போகிறேன் அது தன்னை சார்ந்தவர்களுக்கு நல்லது அதனால் தான் இந்த முடிவு எடுத்தேன் என்று ஜெயம் ரவி அறிவித்திருந்தார்.

television jayam ravi aarthi

அதை தொடர்ந்து அவருடைய மனைவி விவாகரத்து முடிவு ஜெயம் ரவி உடையது. என்னிடம் கலந்து ஆலோசிக்காமல் அவரே எடுத்த முடிவு. அவரை தொடர்பு கொண்டு என் தரப்பு நியாயங்களை சொல்ல வேண்டும், அவருடைய மனதை மாற்ற வேண்டும் என்று நானும் என்னுடைய குழந்தைகளும் முயற்சி செய்கிறோம் ஆனால் அது நடக்க முடியவில்லை. சிலர் தடுக்கிறார்கள் என்று அவரும் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். இதனால் இதில் யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்? என்று புரிந்து கொள்ள முடியாத நிலை தான் இருந்தது.

அதே நேரத்தில் இவர்களுடைய குடும்பப் பிரச்சினையை வைத்து பலரும் பலவித கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். அப்போது ஜெயம் ரவி கோவாவில் பாடகி கெனிஷாவுடன் தங்கி இருப்பதாகவும் இருவருக்கும் ஏற்கனவே தொடர்பு இருப்பதாகவும் சில வதந்திகள் பரவி வந்தது. அது பற்றி பிரதர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி விளக்கம் கொடுத்திருந்தார்.

என்னை பற்றி தவறாக பேசுபவர்களுக்கு தான் அது அசிங்கம். நான் எனக்கும் கெனிஷாவிற்க்கும் இடையில் இருப்பது வெறும் நட்புதான். அதனால் தவறாக பேசாதீர்கள் அந்த பெண்ணுடைய வாழ்க்கை இதற்குள் இழுக்காதீர்கள் என்று வேண்டுகோள் வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பேசிய பேட்டி ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் முதல் 10 வருடங்கள் எங்களுடைய காதல் வாழ்க்கை நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது.

ஆனால் கடந்த மூன்று வருடங்களாக என்னை அந்த வீட்டில் யாரும் மதிக்கவில்லை. என்னுடைய மனைவி அவருடைய அம்மாவின் ப்ரொடக்ஷனில் என்னை வருடத்திற்கு ஒரு படமாவது நடிங்க என்று சொல்கிறார். நான் அவருடைய ப்ரொடக்ஷனில் நடித்தால் அவர்கள் என்னிடம் நஷ்ட கணக்கு காட்டுகிறார்கள். என்னுடைய பெயரில் ஒரு பேங்க் அக்கவுண்ட் கூட கிடையாது.

அந்த வீட்டில் எனக்கு வேலைக்காரர்களுக்கு கிடைக்கும் மரியாதை கூட கிடைக்காது. பண தேவைகளுக்கு நான் அவரிடம் நிற்க வேண்டியது இருக்கிறது. நான் வீட்டை விட்டு வெளியே போகும்போது என் கையில் பணமே கிடையாது என்றும் அதில் ஜெயம் ரவி பேசியிருக்கிறார். இந்த நிலையில் ஜெயம் ரவி பேசுவது சரி என்று சொல்வது போல சில வருடங்களுக்கு முன்பு நடிகர் விக்ரம் பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

television jayam ravi aarthi

அதில் நான் எப்போதும் கையில் பர்ஸ் வைத்திருக்க மாட்டேன். தேவைப்படும்போதுதான் என்னுடைய அசிஸ்டன்ட் கிட்ட வாங்கிக்குவேன். நானும் ஜெயம் ரவியும் வெளிநாடுகளுக்கு எப்போதாவது பார்ட்டிக்கு போகும்போது ஏதாவது பணம் தேவைப்படுகிறது என்றால் ஜெயம் ரவியிடம் மச்சான் பைசா இருக்கா என்று கேட்பேன். ஆனால் அதற்கு அவர் என்கிட்ட இல்லண்ணா என்று சொல்லி தன் மனைவியிடம் இருந்து வாங்கி கொடுப்பார் என்று விருது வாங்கும் நிகழ்ச்சியில் விளையாட்டாக விக்ரம் பேசி இருக்கிறார்.

இதை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் இப்போது ஜெயம் ரவியின் நிலைமை இது தானா? அதனால்தான் மனுஷன் எவ்வளவு வருத்தத்தோடு விவாகரத்து முடிவு எடுத்திருக்கிறாரா? என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+