நடிகர் விக்ராந்துக்கு இரட்டை பெருமை சேர்த்த மகன்.. பெரியப்பா விஜய்யின் ஹைலைட்.. பாராட்டு குவியுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் விஜய்யின் தம்பி மகன் என்ற அடையாளத்தோடு அறிமுகமானவர் விக்ராந்த். ஆனால், அந்த அடையாளத்தை மட்டும் நம்பாமல் தனது திறமையால் தனி இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து சினிமாவில் பயணித்து வருகிறார். நடிப்போடு கிரிக்கெட்டிலும் ஆர்வம் கொண்ட விக்ராந்த், பல பிரபலங்களுடன் நடைபெறும் செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டிகளிலும் அடிக்கடி விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

விக்ராந்த் மகன் சாதனை

இப்போது விக்ராந்த் குடும்பத்தில் வந்திருக்கும் ஒரு சந்தோஷமான செய்திதான் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வரும் விக்ராந்தின் மகன் யஷ்வந்த் சந்தோஷ், பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளி அளவில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியிருக்கிறார். அதுமட்டுமல்ல, படிப்போடு விளையாட்டிலும் சிறந்து விளங்கியதால், பள்ளியின் Assistant Sports Captain ஆகவும் செலக்ட் ஆகி இருக்கிறார். ஒரே நேரத்தில் படிப்பிலும், விளையாட்டிலும் சாதனை படைத்திருப்பதால் குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளது.

Vikranth Yashwanth Santhosh Vijay

தந்தைக்கு பெருமை

இந்த விருது வழங்கும் விழாவின் வீடியோவை விக்ராந்தின் மனைவி மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். "நீ எங்களுக்கு ரொம்ப பெரிய பெருமை சேர்த்துட்ட" என்று மகனை வாழ்த்தி அவர் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளும் வாழ்த்துகளும் குவிந்துள்ளன.

இதில் ரசிகர்களின் கவனத்தை இன்னொரு விஷயமும் ஈர்த்துள்ளது. மகனின் வெற்றி வீடியோவுக்கு பின்னணியாக, முதல்வர் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் பின்னணி இசையை விக்ராந்த் பயன்படுத்தியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், "மகனின் வெற்றியை கொண்டாடும்போதும் பெரியப்பாவின் மாஸ்டர் டச் இருக்கே!" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

முதல்வர் விஜய்யின் தம்பி

விக்ராந்த் விஜயின் அண்ணன் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இருவரும் தங்களது குடும்ப வாழ்க்கையை பெரும்பாலும் வெளிச்சத்திற்கு கொண்டு வராமல் மிகவும் எளிமையாக வைத்திருக்கிறார்கள். அதனால், விக்ராந்தின் மகன் குறித்த இந்த வீடியோ ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸாகவே அமைந்துள்ளது.

சமீப காலமாக முதல்வர் விஜய்யின் குடும்பம் குறித்த எந்த சின்ன தகவலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வரிசையில் இப்போது யஷ்வந்த் சந்தோஷின் இந்த சாதனையும் வைரலாகி இருக்கிறது. "அப்பாவுக்கு மட்டும் இல்லை... பெரியப்பா விஜய்க்கும் பெருமை சேர்த்திருக்கிறார்" என்று விஜய் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Vikranth Yashwanth Santhosh Vijay

திறமைக்கு வெற்றி

படிப்பில் பள்ளி டாப்பர்களில் ஒருவராகவும், விளையாட்டில் துணை கேப்டனாகவும் செலக்ட் ஆகி இருக்கும் யஷ்வந்த் சந்தோஷின் இந்த இரட்டை சாதனைக்கு, சினிமா ரசிகர்களும், விஜய் ரசிகர்களும், விக்ராந்தின் நண்பர்களும் தொடர்ந்து வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

சினிமா குடும்பத்தில் பிறந்ததால் மட்டும் கவனம் கிடைப்பது வேறு; ஆனால் படிப்பிலும், விளையாட்டிலும் தன் திறமையால் பெயர் வாங்குவது வேறு. அந்த இரண்டாவது பாதையில்தான் விக்ராந்தின் மகன் யஷ்வந்த் சந்தோஷ் முதல் அடியை நம்பிக்கையோடு எடுத்து வைத்திருக்கிறார் என்றே பலரும் பாராட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+