திருச்சி வார சந்தையில் காய்கறி விற்கும் நடிகர் விமல்.. என்ன ஆச்சு இவருக்கு? வெளியான போட்டோஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விமல் அடுத்தடுத்து திரைப்படங்களை நடித்துக் கொண்டிருந்தாலும் சமீப காலமாக அவருடைய திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாமல் இருக்கிறது‌. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பண்ணாங்கொம்பு பகுதியில் உள்ள ஒரு வார சந்தையில் நடிகர் விமல் காய்கறி விற்பனை செய்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தான் நடிகர் விமல் கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பி விட்டது என்று ஒருவர் கொடுத்த வழக்கு காரணமாக நீதிமன்றம் விமலுக்கு ஒரு வருட சிறை தண்டனை கொடுத்திருந்தது. அதற்கு எதிர்த்து மேல் முறையீடு செய்யவும் உரிமையையும் வழங்கி இருந்தது. இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் இப்போது விமல் காய்கறி விற்கும் புகைப்படங்கள் வெளியானதும் இவருடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதா? என்று சிலர் கருத்து கூறி வருகின்றனர்.

வாரச்சந்தையில் நடிகர் விமல்

ஆனால் உண்மையில் விமலின் சொந்த ஊரான பண்ணாங்கொம்பில் புதிதாக வாரச்சந்தை தொடங்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் திருச்சியில் நடைபெற்ற படப்பிடிப்புக்கு திங்கள்கிழமை வந்த விமல் சந்தையை பார்த்ததும் உள்ளே போய் அங்கிருந்து வியாபாரிகளுடன் சேர்ந்து காய்கறிகளை விற்பனை செய்திருக்கிறார். முதலில் அவரை அடையாளம் காணாத பொதுமக்கள் அவர் தக்காளி 50 ரூபாய், கத்திரிக்காய் 20 ரூபாய் என்று கத்திக் கூப்பிட்டதும் வந்து காய்கறி வாங்கி இருக்கிறார்கள்.

Vimal Actor Vimal

காய்கறி விற்கும் காரணம்

அதற்கு பிறகு தான் அணிந்திருந்த தொப்பியை விமல் கழற்றி இருக்கிறார். பிறகு அவருடம் பலர் புகைப்படங்கள் எடுத்து இருக்கின்றனர். உடனே இந்த தகவல் சந்தையில் இருந்த எல்லோருக்கும் தெரிய வந்ததும் அங்கே கூட்டம் கூட தொடங்கி விட்டதாம். உடனே அவர்களுடன் புகைப்படம் எடுத்துவிட்டு அங்கிருந்து வியாபாரிகளுக்கு 500 ரூபாய் பணமும் கொடுத்துவிட்டு விமல் கிளம்பி போயிருக்கிறார்.

சில வருடங்களாக விமல் நடிக்கும் திரைப்படங்கள் பெரிய அளவில் பெற்று பெறவில்லை. கடைசியாக அவர் நடித்த வடம் திரைப்படம் கூட அதிகமான விமர்சனத்தை ஏற்படுத்தியது. அந்த படம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை என்பது போலத்தான் பெரிதாக பேசாமல் போய்விட்டது. ஆனாலும் தொடர்ந்து திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விமல் இப்போது புதிய பட சூட்டில் இருக்கிறார்.

வதந்திக்கு பதில்

தன்னைப் பற்றிய சர்ச்சைகளும், வதந்திகளும் ஒரு பக்கம் போய்க் கொண்டிருந்தாலும் தான் எப்போதும் ஜாலியாக வாழ்க்கையை என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று அவரே சில இடங்களில் சொல்லியிருக்கிறார். சமீபத்தில் நடிகர் சூரியின் சொந்த ஊரில் கோவில் திருவிழாவில் கும்மி பாடலுக்கு ஆட்டம் போட்டது பெரிய அளவில் வைரலானது. என்னதான் நடிகரானாலும் சொந்த ஊருக்கு வந்துவிட்டால் நானும் ஊர்காரன் தான்யா.. என்று விமல் காட்டி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+