நடிகர் வினுசக்கரவர்த்தியின் மனைவி இந்த பிரபலம் தானா? இதுவரை யாரும் பார்க்காத குடும்ப புகைப்படம்
சென்னை: நடிகர் வினு சக்கரவர்த்தி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்து பிரபல நடிகராகவும் எழுத்தாளராகவும் பலருக்கும் பரீட்சையமாக மாறி இருந்தார்.
அதிகமான திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வந்த வினு சக்கரவர்த்தி ஆயிரத்திற்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு உடல்நிலை குறைவு காரணமாக மரணம் அடைந்திருந்தார். இந்த நிலையில் முதல் முறையாக நடிகர் வினு சக்கரவர்த்தியின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் வினு சக்கரவர்த்தி தன்னுடைய நடிப்பின் காரணமாக பலரையும் மிரட்டி இருப்பார். தனக்கு வில்லனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை தத்ரூபமாகவே ஒவ்வொரு திரைப்படங்களிலும் வினு சக்கரவர்த்தி காட்டி இருப்பார். அதுபோல நடிகர் வினுசக்கரவர்த்தி மதுரையில் பிறந்திருந்தாலும் கல்லூரி படிப்பை சென்னையில்தான் முடித்திருக்கிறார்.
காலேஜ் படிக்கும் போது வினு சக்கரவர்த்திக்கு நாடகம் எழுதுவதில் அதிகமான ஆர்வம் இருந்திருக்கிறது. அதனாலேயே பல நாடகங்களை இவர் எழுதி இயக்கியும் இருக்கிறாராம். அதற்குப் பிறகு கல்லூரி முடித்ததும் இவர் முயற்சி எடுத்து காவல்துறையில் ஆய்வாளராக வேலை செய்திருக்கிறார். ஆறு மாதங்கள் வேலை செய்துவிட்டு பிறகு தெற்கு ரயில்வேயில் மூத்த அதிகாரியாக பொறுப்பேற்று இருக்கிறார். அங்கு நான்கு வருடங்களாக வேலை செய்து கொண்டிருந்தாராம்.
என்னதான் இவர் உயர் அதிகாரியாக இருந்தாலும் இவருக்குள் இருந்த நடிப்பு திறமையின் காரணமாகவே அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு இவர் கன்னட இயக்குனர் புட்டன்னா கனகலிடம் கதை ஆசிரியராக வேலைக்கு சேர்ந்திருக்கிறார். பிறகு அவரோடு சேர்ந்து சில திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது தான் இவர் தமிழ் திரைக்கு வந்திருக்கிறார். ரோசாப்பூ ரவிக்கைக்காரி முதல் பல திரைப்படங்களில் கதாசிரியராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து நடிகராகவும் மாறி பல திரைப்படங்களில் இவருடைய நடிப்பால் பலரையும் மிரள வைத்திருப்பார். வில்லனாக அதிகமாக திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பலருடைய மனதையும் கவர்ந்திருக்கும். இவருக்குள் இப்படி ஒரு திறமையா என்று சொல்கிற மாதிரி தான் இவரால் இதுவும் செய்ய முடியும் என்று நிரூபித்து இருந்தார்.
ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களோடும் இவர் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனாலயே நடிகர் ரஜினிகாந்த் நடித்த பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

அதுபோல நடிகர் ரஜினிகாந்த் வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருந்ததாம். ஆனால் அது கடைசி வரை நிறைவேறாமல் போய்விட்டதாம். அது அவரது நிறைவேறாத கனவாக ஆகிவிட்டது என்று அவருடைய மனைவி பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
அதுபோல நடிகர் வினு சக்கரவர்த்தியின் மனைவியின் பெயர் கர்ண பூ வாம் அதுபோல இவருக்கு ஒரு மகள் இருக்கிறாராம்.
அவருடைய பெயர் சண்முகப்பிரியாவாம். இவர் அமெரிக்காவில் பேராசிரியராக இருக்கிறாராம். அதுபோல ஒரு மகனும் இருக்கிறாராம். அவர் பெயர் சரவண பிரியன். இவர் லண்டனில் மருத்துவராக இருக்கிறாராம். இந்த நிலையில் நடிகர் வினு சக்கரவர்த்தி உயிரோடு இருக்கும்போது அவருடைய குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்ததும் ரசிகர்கள் பலர் அவரை மிஸ் பண்ணுவதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications