ராதிகா, குஷ்பு மாதிரி பெண்களை நான் பார்த்ததே இல்லை.. அவங்க இப்படித்தான்! விஷால் பேட்டி
சென்னை: நடிகர் விஷால் பேட்டி ஒன்றில் நடிகை ராதிகா மற்றும் குஷ்பூ மாதிரி தைரியமான பெண்களை நான் பார்த்ததே இல்லை, அவர்கள் இப்படித்தான் என்று சில விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
கடந்த சில வாரங்களாகவே மலையாள சினிமா உலகில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் அட்ஜஸ்மென்ட் பிரச்சனைகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து தமிழ் நடிகைகளும் தாங்களும் அந்த பிரச்சனைகளை அனுபவித்ததாக கூறி வருகிறார்கள்.

அதிலும் ஒரு சில நடிகைகள் தங்கள் தன் முன்பே அடுத்த நடிகைகளுக்கும் இது போன்ற பிரச்சனைகள் நடந்தது என்று கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் நடிகர் விஷால் தன்னுடைய பிறந்தநாள் அன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவரிடம் பெண் நடிகைகளுக்கு வரும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் நடிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று யாராவது கேட்டால் உடனே அவர்களை செருப்பை கழட்டி அடித்து விடுங்கள் என்று சொல்லி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஷால் இப்படி பேசியது சரி என்று சில நடிகைகள் அவருக்கு சப்போர்ட்டாக பேசியிருந்தார்கள். ஒரு சில நடிகைகள் விஷால் பேசியது தவறு அதுபோன்று பெண்கள் செருப்பால் அடித்தால் அதற்குப் பிறகு அந்த பெண்களுக்கு பாதுகாப்பு யார் கொடுப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

அதிலும் நடிகை ராதிகா, விஷால் நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நிலையில் இதுபோன்று பொறுப்பில்லாமல் பதில் சொல்வது சரியா? பெண் நடிகைகளை ஒருவர் தவறாக பேசினால் செருப்பால் அடிக்கலாமென்று விஷால் சொல்கிறாரே youtube இல் ஒரு நபர் தன்னை பத்திரிக்கையாளர் என்று சொல்லிக்கொண்டு பெண் நடிகைகள் பற்றி ஆபாசமாக பேசிக் கொண்டிருக்கிறாரே அவரை விஷால் செருப்பை கழட்டி அடிப்பாரா? அவர் செருப்பால் அடித்தால் நான் விளக்கமாறு கொண்டு வருகிறேன் என்று கோபமாக பேசி இருந்தார்.
இந்த நிலையில் நடிகைகள் குறித்து நடிகர் விஷால் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் நடிகை ராதிகா மேடம், குஷ்பூ மாதிரி தைரியமான பெண்களை நான் பார்த்ததே இல்ல. அவங்க எல்லாம் மனசில் என்ன நினைக்கிறாங்களோ அதை அப்படியே பேசிடுவாங்க. ராதிகா மேடம் நடிகையா மட்டுமல்லாமல் அரசியலிலும் களம் இறங்கி இருக்காங்க. அதற்கு நான் வாழ்த்துக்கள் சொல்லுவேன். அவங்க சித்தி சீரியல் மூலமாக பல பெண்கள் மனதையும் கவர்ந்துட்டாங்க.

நடிப்பை தாண்டி அரசியலிலும் அதிகமா ஜெயிப்பாங்க அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று மீண்டும் அந்த பேட்டியில் விஷால் கூறி இருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications