நடிகை மீனா தோள் மீது கைபோட்டு.. அதுக்கு இப்படியா? அவரிடமும் தவறாக நடந்தாரா விஷால்: மறுக்கும் பிரபலம்
சென்னை: மதகஜராஜா படக்குழுவினர் நடத்திய விருந்தில், மதுபோதை பரிமாறப்பட்டதாகவும், நடிகர் விஷால் போதையில், நடிகைகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுவதும், அப்பட்டமான பொய்யான தகவல் என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
King 24X7 என்ற யூடியூப் சேனலில், பயில்வான் ரங்கநாதன் தந்துள்ள பேட்டியில், "சமீபத்தில் அமரன் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகளுக்கு விருந்து பரிமாறப்பட்டது.. படத்தின் வெற்றி விழாவாகவும் அந்த விருந்து கருதப்பட்டது..

அதேபோல, மதகஜராஜா திரைப்படம், 12 வருடங்களுக்கு பிறகு வெளிவந்து சக்கை போடு போட்டுள்ளது.. இந்த படத்தின் தமிழகத்தின் விநியோக உரிமையை சுந்தர்.சி வாங்கினார்.. அதில் அதிர்ஷ்ட மழை கொட்டியது.. ஏகப்பட்ட வருமானம்.
இந்த அடிப்படையில் தன்னுடைய நண்பர்களுக்கு விருந்து வைத்தார்.. இதில் விருந்தில், படத்தில் நடித்த விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார், நடிகை மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விருந்துகள்: பொதுவாக அந்த காலத்தில் நடிகர்கள் எஸ்.எஸ். சந்திரன், விஜயகுமார் இவர்கள் இருவரும்தான் நடிகைகளை கட்டி அணைப்பார்கள்.. எஸ்எஸ் சந்திரனை மாமா என்றும், விஜயகுமாரை சார் என்றும் நடிகைகள் அழைப்பார்கள்.. இவர்கள் இருவருமே வயதில் மூத்தவர்கள்.. அதனால், அப்பா, சித்தப்பா, மாமா முறையில் நடிகைகள் இவர்களிடம் அன்பாக பேசுவார்கள். அதேபோல, இவர்களும், தங்கள் மகளாக, பேத்தியாக, சகோதரியாக நடிகைகளிடம் நடந்து கொள்வார்கள்.
ஆனால், சில நடிகர்களும், நடிகைகளை கட்டி அரவணைக்கிறார்கள். அதை தவறு என்று கருதக்கூடாது.. நடிகைகளை கட்டி அணைக்கிறார் என்று விஷாலை சொன்னால், அது தவறு.. அன்பின் அடிப்படையில் பரிமாறப்பட்ட அரவணைப்பாகத்தான் அதை பார்க்க வேண்டுமே தவிர, வில்லங்கமாகவோ, விபரீதமாகவோ நினைக்க இதில் இடமில்லை,.
அந்த விருந்தில், விஷால் போதையில் இருந்தார் என்கிறார்கள்.. இப்போதுதான் விஷால் விபத்திலிருந்து மீண்டுவந்துள்ளார்.. அவர் குடிப்பாரா? அப்படி குடிப்பதற்கு மருத்துவர்கள் அனுமதிப்பார்களா? உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனுமதிப்பார்களா? விஷால் குடிக்க வாய்ப்பில்லை.. ஆனால், அவர் குடித்துவிட்டார் என்று சில மீடியாக்காரர்கள் வன்மத்தை கக்குகிறார்கள்.
நடிகை மீனா: அதேபோல, மூத்த நடிகை என்ற முறையில், நடிகை மீனாவின் தோள் மீது கை வைத்து போட்டோ எடுத்தார்.. கணவனை இழந்தவர் மீனா என்று அனைவருக்கும் தெரியும். சக நடிகை என்பதால், இப்படி போட்டோ எடுத்திருக்கிறார். அத்துடன், கேஎஸ் ரவிக்குமாருடன் பல படங்களில் நடித்தவர் மீனா. அந்த அடிப்படையில் விருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கலாம். இதையெல்லாம் மீடியாக்கள் தவறாக சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.
அதேபோல விஷால், இப்போது அடுத்தக்கட்டதுக்கு நகர நினைக்கிறார். இதற்காக கடுமையாக உழைக்கிறார்.. புதிய படங்களில் நடிக்க போகிறார்.. கதைகளையும் கேட்டு வருகிறார்.. அப்படியிருக்கும்போது, திரை நட்சத்திரங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக சொல்வதெல்லாம் தவறு. புண்பட்டவர்களுக்கு மருந்துதான் போட வேண்டுமே தவிர, கத்தியால் கீறி, அவர்களை மேலும் வலிக்குள்ளாக்கி அதில் நாம் இன்பப்படக்கூடாது.
நட்சத்திர கலைவிருந்து: அதுமட்டுமல்ல, "அன்றைய தினம் நடந்த மதகஜராஜா படக்குழுவினரின் விருந்தில், போதை பரிமாறப்பட்டதாகவும், சில நடிகர், நடிகைகள் போதையில் தவறாக நடந்து கொண்டார்கள் என்று சொல்வதும் பொய்யானது. வெறும் நட்சத்திர கலைவிருந்து நடந்ததே தவிர, தவறாக எதுவும் நடக்கவில்லை என்று படக்குழுவினர் விளக்கம் ஒன்றை தந்திருக்கிறார்கள்" என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
-
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் எப்போது ரிலீஸ்? ஜெயிப்பாரா இந்த ஜூனியர்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications