தனுஷ் அரசியலுக்கு போய்விட்டால் இதுதான் நடக்கும்! இழப்பு.. நடிகர் விஷால் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பல்வேறு தளங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்தவர். தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் படத்தில் நடித்து வரும் நிலையில் தனுஷின் சமீபத்திய நடவடிக்கைகள் அவரது அரசியல் வருகையை குறித்து எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில் அவருடைய அரசியல் வருகை பயணம் குறித்து நடிகர் விஷால் ஓபன் ஆக கருத்து தெரிவித்திருக்கிறார்.

தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம்

தனுஷ் கடந்த மாதம் தனது 43 வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டனர்‌. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூரில் தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாகவும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ் தன்னுடைய குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது சோசியல் மீடியாவில் அதிகமாக விமர்சனத்தை ஏற்படுத்தியது.

அப்போது தனது ராயன் திரைப்படத்திற்கு விருது வழங்கப்படுவதை பலரும் விமர்சித்து வந்த நிலையில் அதுக்கும் அவர் பேசியிருந்தார். இதற்கு முன்பு தான் நடித்த படங்களுக்கு விருது கிடைக்காத போது யாரும் கேள்வி எழுப்பவில்லை ஆனால் இப்போ மட்டும் எல்லோரும் கேள்வி எழுப்புறாங்க. தட்டி விடாதீர்கள்... தட்டி கொடுங்க.. என்று அவர் பஞ்ச் டயலாக் பேசி இருந்தார்.

Vishal Dhanush

தனுஷின் அரசியல் நகர்வுகள்

அதுபோல இப்பொழுது அவர் தனது ரசிகர் மன்ற செயல்பாடுகளை துரிதப்படுத்திருப்பதை பார்க்கும்போது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. ரசிகர் மன்றத்தை சட்டப்பேரவை தொகுதி வாரியாக வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள தனுஷ் வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தனுஷ் ரசிகர் மன்ற அமைப்பை பல்வேறு மாவட்டங்களாக பிரித்து செயல்படுத்தும் நடவடிக்கைகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளின் குடும்ப நலனிலும் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். இது போன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் சேர்த்து பார்க்கும் போது தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை எதிர்காலத்தில் ஒரு ஸ்ட்ராங்கான அமைப்பாக மாற்ற முயற்சி செய்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தனுஷ் பற்றி விஷால் பேட்டி

இந்த சூழலில் தான் நடிகர் விஷாலிடம் தனுஷின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அரசியல்வாதிகள் கூத்தாடிதனம் செய்யும்போது கூத்தாடிகள் அரசியல் செய்வார்கள். தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என பலரும் சொல்லி வருகிறார்கள். அதுதான் அவரது நோக்கம் என்றால் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அரசியல் என்பது அனைவருக்குமானது. யார் வேண்டுமானாலும் அதில் நுழையலாம்.

Dhanush: விரைவில் தனுஷ் புதிய கட்சி? கோவையில் தொகுதி வாரியாக உறுப்பினர்கள் சேர்க்கை.. செம ஸ்பீடில் நற்பணி மன்றம்
தனுஷ் ஒரு சிறந்த நடிகர், இயக்குனர், அதனால் அவர் அரசியலுக்கு போய்விட்டால் இன்னொரு நல்ல நடிகரையும், திறமையான கலைஞரையும் நாம் இழக்க போகிறோம் என்று சொல்லி இருக்கிறார். காரணம் விஜய் சினிமாவில் இருந்து அரசியலுக்கு போனதும் சினிமாவை விட்டு முழுமையாக விலகிவிட்டார். அதேபோல தனுஷ் அரசியலுக்கு போய் விட்டால் சினிமாவில் அவரை இழக்கப் போகிறோம் என்று விஷால் பேசியிருக்கும் நிலையில் இது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+