Actor Vishal: 18 வருட மேனேஜரை நீக்கிய விஷால்.. எங்கேஜ்மென்ட்க்கு பிறகு நடந்த அதிரடி சம்பவம்!
சென்னை: நடிகர் விஷால் தன்னிடம் 18 வருடங்களாக மேனேஜராக இருந்த ஹரி என்பவரை மேனேஜர் பொறுப்பிலிருந்து நீக்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஷால் ஆரம்பத்தில் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக இருந்து தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி இருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தது. முதல் படமே அவருக்கு வெற்றியும் கொடுத்தது. அதனால் அடுத்ததாக சண்டக்கோழி, தாமிரபரணி, திமிரு உள்ளிட்ட படங்களில் நடித்து அடுத்தடுத்து வெற்றிக்கனியை ருசித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் சில திரைப்படங்களில் சறுக்கலும் ஏற்பட்டது.

இந்த சூழலில் ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் அவருக்கு மீண்டும் ஒரு கம் பேக் கொடுத்தது. அடுத்ததாக ஹரி இயக்கத்தில் ரத்தினம் என்ற படத்தில் நடித்திருந்தார். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த தாமிரபரணி, பூஜை படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இதனால் மூன்றாவது முறையாக இவர்கள் இருவரும் இணைந்ததும் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அந்த படம் விஷாலுக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.
அதுபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மத கஜ ராஜா படமும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் விஷால் கைகள் நடுங்கியபடி கண்களில் இருந்து கண்ணீர் வந்தபடி பேசி இருந்தார். இதனால் விஷாலுக்கு என்ன ஆச்சு என்று பலரும் பதறிப் போய் இருந்தனர்.
அப்போது ரசிகர்களின் அன்பை பார்த்து சந்தோஷத்தில் சில நாட்களிலேயே பழைய நிலைக்கு வந்திருந்தார். அதுபோல விஷாலுக்கு நடிகை தன்ஷிகாவுடன் சமீபத்தில் தான் எங்கேஜ்மெண்டும் முடிவடைந்தது. பல வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தாலும் இந்த விஷயத்தை ரகசியமாக வைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தனர்.
இந்தநிலையில்தான், இப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் விஷாலிடம் 18 வருடங்களாக மேனேஜராக இருந்த ஹரி என்பவரை, அந்த பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கி இருக்கிறார் விஷால்.
அது குறித்து செய்தியாளர்களுக்கு அனுப்பிய தகவலில், விஷால் பிலிம் ஃபேக்டர் (VFF), தேவி டிரஸ்ட் மற்றும் விஷால் ரசிகர் மன்றத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஹரி நீக்கப்படுகிறார். அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் என்ன காரணத்திற்காக விஷால் இந்த முடிவு எடுத்தார் என்பது பற்றி இன்னும் வெளிப்படையாக அவர் தெரிவிக்கவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications