Vishal Marriage: விஷால்- சாய் தன்ஷிகாவின் திருமண தேதி எப்போது? கல்யாணம் வச்சிகிட்டு இப்படியா செய்வாரு!
சென்னை: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நடிகர் விஷாலின் திருமணம் வரும் 29ஆம் தேதி, அவருடைய பிறந்தநாளில் நடக்கிறது. அவர் நடிகை தன்ஷிகாவை மணக்கிறார். திருமண தேதி நெருங்கி வரும் நிலையில் நடிகர் விஷால் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, த்ரிஷா, மும்தாஜ், அனுஷ்கா, சித்தாரா, நக்மா, ஷோபனா, கோவை சரளா, ஸ்ருதி ஹாசன், ஆன்ட்ரியா, தபு, கவுசல்யா, கிரண் உள்ளிட்டோர் 40 வயதாகியும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருக்கிறார்கள். இவர்களில் விஷாலும் இணைந்திருந்தார்.
ஆனால் அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணம் நின்று போனது. அதன் பிறகு விஷால் சிலருடன் கிசுகிசுக்கப்பட்டார். அதிலும் முன்னணி நடிகர் ஒருவரின் மகளுடன் காதல் என கிசுகிசுப்பில் சிக்கினார்.
இந்த நிலையில் அப்படி ஏதும் இல்லை என்பதை போல அந்த நடிகரின் மகளும் தற்போது வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நடிகர் சங்கம் கட்டடம் கட்டி முடித்தவுடன்தான் திருமணம் என விஷால் அறிவித்திருந்தார்.
நடிகர் சங்க கட்டடம்
இந்த நிலையில் கிட்டதட்ட 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் சங்க கட்டடம் கட்டப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் விஷாலுக்கும் தன்ஷிகாவுக்கும் காதல் என சொல்லப்பட்டது. இதை இருவருமே மறுக்காமல் இருந்தனர். இந்த நிலையில் யோகி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகை தன்ஷிகா, விஷாலுடனான காதலை தெரிவித்தார். அத்துடன் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாகவும் அவர் அறிவித்தார்.
தன்ஷிகா
இதையடுத்து இருவரும் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். தன்ஷிகாவுக்கு விஷால் மீது காதல் ஏன் வந்தது என்பது குறித்தும் தெரிவித்தார். மேலும் விஷாலுக்கும் தன்ஷிகாவுக்கும் 12 வயது வித்தியாசம் இருக்கிறது என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது.
கல்யாண தேதி
கல்யாண தேதி நெருங்கிய நிலையில் தற்போது விஷால் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் ரசிகர்கள் இனி கை நடுங்குது, கால் நடுங்குதுனு ஒருத்தரும் சொல்லமுடியாது என கமென்ட் போடுகிறார்கள்.
திருமணம் எப்போது
இவர்களது திருமணம் நடிகர் சங்கத்தில் நடைபெறுகிறதா என தெரியவில்லை. திருமண தேதி நெருங்கிய நிலையில் அவர்கள் பத்திரிகை கொடுத்தது போலும் தெரியவில்லை. ஒரு வேளை சிம்பிளாக திருமணம் செய்து கொண்டு பிறகு, வரவேற்பு நிகழ்ச்சிக்கு எல்லாரையும் அழைக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications