விஷாலை திட்டமிட்டு காலி பண்ணிட்டாங்க.. அந்த நபர் தான்! 4 மாசம் ஆயிடுச்சு! கதறிய நண்பர்
சென்னை: நடிகர் விஷால் உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் இது தான் என்று அவருடைய நண்பர் ராஜா பேட்டி ஒன்றில் கண்கலங்க பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில தினங்களாகவே நடிகர் விஷால் பற்றிய செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக இருக்கிறது. அதாவது மதகஜராஜா திரைப்படத்தின் ஃப்ரீ ரிலீஸின் போது விஷால் வந்த நிலையை பார்த்து ரசிகர்கள் பதறிப் போய் இருக்கிறார்கள். இதுவரைக்கும் அவரை செல்லமே, சண்டக்கோழி படத்தில் கெத்தான கேரக்டரில் பார்த்து ரசித்த ரசிகர்கள் இப்போது பார்ப்பதற்கு பரிதாபகரமான நிலையில் இருந்தார்.

கண்களில் நீர் வடிந்து கொண்டே, கைகள் மைக்கை கூட பிடிக்க முடியாத அளவிற்கு நடுங்கி கொண்டு இருந்தது. அதோடு நின்று பேச முடியாத வகையில் இருந்த விஷாலை பார்த்ததும் ரசிகர்கள் பதறிப் போயிருந்தனர். ஐயோ இவருக்கு என்ன ஆனது? என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. இவர் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்பது பலருடைய குமுறல்களாக இருக்கிறது.
அதே நேரத்தில் விஷால் பற்றி சிலர் நெகட்டிவ் ஆகவும் கதை பரப்பி வருகிறார்கள். விஷாலுக்கு தவறான பழக்கவழக்கங்களால் இப்படி ஆகிவிட்டது என்று சிலர் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் விஷாலின் நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான ராஜா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது விஷால் குறித்து கண்கலங்க பேசியிருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில், விஷால் உடைய இப்போதைய நிலைமையை பார்த்து எங்களுக்கு கண்ணீரே வருகிறது. விஷால் பலரை மேலே ஏற்றி அழகு பார்த்தவர். நான் இன்று ஒரு தயாரிப்பாளராக இருக்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணமே விஷால் தான். என்னைப்போல பலரை விஷால் வளர்த்து விட்டிருக்கிறார். ஆனால் அவரின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் பாலா தான்.
அவன் இவன் திரைப்படத்தில் விஷாலின் அழகான கண்ணை மாற்ற வேண்டும் என்று தைத்ததால்தான் விஷாலுக்கு தலைவலி பிரச்சனை வந்தது. கடந்த சில வருடங்களாக தலைவலியில் விஷால் துடித்ததை நானே பார்த்திருக்கிறேன். அவர் அவ்வளவு கஷ்டப்பட்டார். அதற்கு முக்கிய காரணம் பாலா என்று தான் நான் சொல்லுவேன்.
என்னை பொருத்தவரையில் நான் விஷால் உடைய ரசிகர். அதற்கு பிறகு தான் அவருடைய நண்பர். அந்த அளவிற்கு எங்களுக்கு விஷாலை பிடிக்கும். ஆனால் விஷால் படும் கஷ்டத்தை எங்களால் இப்போது பார்க்க முடியவில்லை. கடந்த நான்கு மாதமாக நான் விஷாலிடம் பேச முயற்சி செய்கிறேன் அவர் யாரிடமும் பேசவேயில்லை. அதற்கு காரணம் எனக்கு இப்போதுதான் தெரிகிறது.
விஷாலின் உடல்நிலை சரியில்லாததால் அவர் யாரையும் சந்திக்கவில்லை என்று தெரிகிறது. விஷால் சில வருடங்களாகவே வெளிநாடுகளில் சென்று சிகிச்சை எடுத்து பார்த்து இருக்கிறார். ஆனாலும் அவருக்கு சரியாகவில்லை. விஷாலின் இந்த நிலைமைக்கு காரணம் யார் என்று விசாரித்து கொண்டிருக்கிறேன் மருத்துவர்களிடம் பேசி இந்த இடத்தில் இருந்துதான் விஷாலுக்கு பிரச்சனை உருவாகி இருக்கிறது என்று தெரிந்தால் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட நபர் மீது நாங்கள் வழக்கு தொடர்வோம்.
இது விஷால் வேண்டாம் என்று சொன்னாலும் நான் செய்வேன். அந்த அளவிற்கு எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. பாலா எதற்காக விஷாலுக்கு இப்படி ஒரு கேரக்டரை கொடுத்தார்? நான் அடிக்கடி விஷாலிடம் கேட்பேன் இப்படி ஒரு படத்தில் நீங்க நடிக்கணுமா என்று கேட்பேன் அதற்கு அவர் சிரிக்க மட்டும் தான் செய்வார்.
விஷால் மட்டுமல்ல எந்த நடிகராக இருந்தாலும் நம்மால் எதுவும் செய்ய முடியும் என்பதை காட்ட வேண்டும் என்று ஒரு ஆசையில் தான் இருப்பார்கள். அதுபோலத்தான் விஷால் கூட அந்தப் படத்திற்காக அப்படி நடித்திருக்கிறார். ஆனால் அவருடைய இந்த நிலைமையை பார்த்தால் வேதனையாக இருக்கிறது. விஷாலை திட்டமிட்டு தீர்த்து கட்டி விட்டார்கள்.
இப்போது விஷால் அதிகமாக குடித்ததால் இப்படி ஆகிவிட்டது என்று கூட சிலர் சொல்வதை பார்த்தேன். இதுவெல்லாம் சுத்த பொய். விஷால் அவருடைய உடம்பை அவ்வளவு ஆரோக்கியமாக வைத்துக் கொள்வார். தான் ஒரு நடிகன் என்பதை காட்ட அவர் உடலை தான் அடையாளப்படுத்துவார். அவர் எப்படி கண்ட சரக்கை குடித்து உடம்பை கெடுத்துக் கொள்வார்? என்று அந்த பேட்டியில் ராஜா தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications