பிக் பாஸுக்குள் இத்தனை சீக்ரெட் இருக்கு! சட்டையின் கலர் முதல் பட்டன் வரை.. ரகசியத்தை உளறிய தினேஷ்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அதில் பைனல் போட்டியாளராக இருந்த விஷ்ணு, தினேஷ், மணி சந்திரா போன்றோர் பேட்டி ஒன்றில் பிக் பாஸ் பற்றி பல ரகசியங்களை உடைத்து இருக்கின்றனர். அது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சில போட்டியாளர்கள் வெளியே இருக்கும் குடும்பத்தினருக்கு ரகசியமாக சில க்ளூ கொடுப்பது பற்றியும் அதுபோல வெளியே இருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் பொருள்களில் அந்த வாரம் போட்டியாளர்களின் விளையாட்டு வெளியே எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பதை சொல்லுவார்கள் என்று தினேஷ் பிக் பாஸ் ரகசியத்தை உடைத்து இருக்கிறார்.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியே நடக்கும் விஷயங்கள் எல்லாம் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு எப்படி தெரிகிறது என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் மாயா திடீரென்று ஒரு நாள் பெட்டில் இருந்து தன்னுடைய குடும்பத்தினரிடம் மைக்கில் பேசியிருந்தார்.
அதாவது தன்னுடைய வீட்டில் ஃபேன் இல்லை அதனால் அங்கிருக்கும் ஃபேனை கழட்டிவிட்டு ஏசியை மாட்ட வேண்டும் அதுவும் நான் வந்த பிறகு தான் அந்த ஏசியை ஆன் செய்வேன் என்று சொல்லியிருந்தார். இவர் முன்னுக்கு பின்பாக திடீரென்று மைக்கில் பேசி இருந்த வீடியோ இணையத்தில் அதிகமாக கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. ஃபேன் இல்லை என்று சொல்லும் மாயா அந்த பேனை கழட்டிவிட்டு ஏசியை மாட்டுங்கள் என்று சொல்கிறார்.. இது என்னவாக இருக்கும்?
அதுபோல பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து 100 நாட்கள் ஆகப்போகிறது. இந்த நேரத்தில் இப்போதுதான் தன்னுடைய வீட்டில் ஃபேன் இல்லை என்பது மாயாவுக்கு ஞாபகம் வந்ததா? என்றும் சில கேள்வி எழுப்பி வந்தனர். இப்படியான நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் தினேஷிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தினேஷ் இந்த மாதிரி நிறைய விஷயங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள்ள நடக்கத்தான் செய்கிறது.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு வெளியே இருந்து வரும் உடைகளில் இருந்து நிறைய கோட் வேர்ட் இருக்கிறது. அதாவது மஞ்சள் கலரில் ஒரு சட்டை வந்துவிட்டால் வெளியே தப்பாக போய் கொண்டு இருக்கிறது என்று அர்த்தமாம் .அதுபோல சட்டையில் ஒரு பட்டன் மட்டும் கருப்புபாக வந்துவிட்டால் அதுவும் வெளியே தப்பாக போகிறது என்று அர்த்தம். இந்த மாதிரி சின்ன சின்ன லாஜிக் நிறைய இருக்கு. இது இது பற்றி உள்ளே வருவதற்கு முன்பே நிறைய சொல்லி வைத்துவிட்டு சிலர் வந்திருக்கிறார்கள்.

ஆனால் இதை புரிந்து கொண்ட பிக் பாஸ் இவர்களை குழப்புவதற்காக பல விஷயங்களை மாற்றி வைத்த சம்பவங்களும் உண்டு. அதாவது வார இறுதி நாளில் ஒரு நபருக்கு டிரஸ் வரவில்லை என்றால் அவர்தான் வெளியே போகிறார் என்று உள்ளே எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அது அப்படி நடக்கவே இல்லை. ஒரு முறை மணிச்சந்திரவிற்கு வார இறுதி நாளுக்கான டிரஸ் வரவில்லை உடனே அவர்தான் வெளியே போகிறார் என்று எல்லோரும் சொல்லி விட்டார்கள் என்று சொல்ல மணி அதை உண்மை என்று நான் ஏமாந்து குழம்பிப் போய்விட்டேன் என்று கூறியிருக்கிறார்.
அதுபோல ஒரு முறை விசித்திராவிற்கு இரண்டு கவரில் டிரஸ் வந்தது. அதை பார்த்து விஷ்ணு ரொம்பவே அதிர்ச்சி அடைந்து விட்டார். காரணம் அந்த வாரம் விஷ்ணு விசித்ரா மேடத்திடம் ரொம்பவே சண்டை போட்டு இருந்தார். அதுபோல உள்ளிருக்கும் போட்டியாளர்கள் ஒரு மாதிரி கேமை விளையாடி கொண்டு இருந்தால் பிக் பாஸ் அவர்களையே குழப்பி விடுவார்கள் என்றும் அந்த பேட்டியில் தினேஷ் மற்றும் விஷ்ணு பேசியிருக்கிறார்கள்.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications