காசி படத்தில் வில்லன்.. சீரியலில் ஹீரோ.. நடிகர் விஷ்ணு பிரசாந்த் திடீர் மரணம்.. வெளியான காரணம்
சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான காசி திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிரபலமடைந்த நடிகர் விஷ்ணு பிரசாந்த் நேற்று உடல்நிலை குறைபாட்டால் காலமாகி இருக்கிறார். அவர் குறித்த தகவல்கள் பலரையும் வருத்தமடைய வைத்திருக்கிறது.
சமீபகாலமாகவே சீரியல் மற்றும் சினிமாவில் நடிக்கும் பல பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் இவர்களை பார்த்து வியந்தவர்களுக்கு இவர்களுடைய மரண செய்தி வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்து பலரையும் மிரட்டிய நடிகர்கள் பிறகு காணாமல் போயிருக்கிறார்கள், அவர்கள் திடீரென இறந்து விட்டார்கள் என்ற செய்தியை கேட்கும் போது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

விஷ்ணு பிரசாத் நடித்த திரைப்படம்
அது போல தான் விக்ரம் நடிப்பில் வெளியான காசி திரைப்படத்தில் பலருடைய திட்டல்களை வாங்கிய விஷ்ணு பிரசாத் நேற்று காலமாகி இருக்கிறார். காசி திரைப்படத்தில் பலருடைய வெறுப்பை சம்பாதித்த விஷ்ணு பிரசாத் மலையாளத்தில் பல சீரியல்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார். அதுபோல மலையாளத்தில் கையெதும் தூரத்தில், லோகநாதன் IAS, ரன்வே, மாம்பழ காதல், லையன், பென் ஜான்சன் போன்ற பல திரைப்படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
விஷ்ணு பிரசாத் நடித்த சீரியல்கள்
மலையாள சீரியல்களான ஸ்த்ரீபதம், ராக்குயில், சுயம்வரம் போன்றவற்றில் வில்லன் கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார். இவர் கொஞ்சம் நாட்களாகவே கல்லீரல் நோயால் அவதிக்கப்பட்டு வந்திருக்கிறார். அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய உடல்நிலை மோசமாகி இருக்கிறது. அதனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.

கல்லீரல் பிரச்சனை
அதனால் விஷ்ணு பிரசாந்துக்கு அவருடைய மகளே கல்லீரல் தானம் செய்ய முன் வந்திருக்கிறார். அவருக்கான அதற்கான சிகிச்சைக்கு 30 லட்சம் தேவைப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த பணத்திற்காக விஷ்ணு பிரசாந்தின் குடும்பம் நிதி திரட்டி கொண்டிருக்கும்போது அவருடைய உடல்நிலை மோசமாகி இருக்கிறது. இதனால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
திடீர் மரணம்
இந்த நிலைகள் தான் நேற்று மே ஒன்றாம் தேதி விஷ்ணு பிரசாத் சிகிச்சை பலன் இன்றி காலமாகி இருக்கிறார். 49 வயதான விஷ்ணு பிரசாத்தின் மரண செய்தி அவருடைய குடும்பத்தினர் மட்டுமல்லாமல் மலையாள சினிமா மற்றும் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் அவர் பிரபலமடைந்தது காசி திரைப்படத்தின் மூலமாகத்தான் இந்த திரைப்படத்திற்கு பிறகு விஷ்ணு பிரசாந்த் பெரிதாக தமிழில் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இப்போது அவருடைய மரண செய்தியை கேட்டு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications