பிரபல தயாரிப்பாளர் மரணத்துக்கு பிரபலங்கள் யாருமே போகலையா.. என்ன கொடுமை இது!
சென்னை: விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ் பி.நாகிரெட்டியின் இளைய மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி கடந்த 12ம் தேதி காலமானார். அவருக்கு வயது 75.
அவரது மனைவி பெயர் பி.பாரதிரெட்டி. இவருக்கு ராஜேஷ் ரெட்டி என்ற மகனும், ஆராதனா ரெட்டி, அர்ச்சனா ரெட்டி என்று இரு மகள்களும் உள்ளனர்.

பி.வெங்கட்ராம ரெட்டி தமிழில், நடிகர் விஜயின் ஆரம்ப கால படமான ரசிகன், செந்தூரபாண்டி லேட்டஸ்டாக பைரவா போன்ற படங்களைத் தயாரித்தவர்.
நடிகர் விஷாலின் தாமிரபரணி, தனுஷின் படிக்காதவன், வேங்கை, நடிகர் அஜீத்தின் வீரம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். தற்போது இவரது தயாரிப்பில் சங்கத்தமிழன் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
12ம்தேதி இவர் மரணமடைந்தார். இவரது இறுதி அஞ்சலி சென்னை நெசப்பாக்கத்தில் நடைப்பெற்றது என்றாலும், இவரின் படத்தில் நடித்த ஒரு பெரிய நடிகர் கூட அதில் கலந்துகொள்ளவில்லையாம். நடிகர் ஸ்ரீமன் மட்டும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாராம்.
விஜய் சேதுபதி லாபம் ஷூட்டிங்கிலிருந்து வந்தும் இன்னும் கூட அவர் வீட்டாரிடம் சென்று துக்கம் விசாரிக்கலையாம். அஜீத் மேனேஜர் நேரில் சென்று பார்த்து, அஜீத் இரண்டு அல்லது மூன்று நாளில் ஷூட்டிங் முடிந்து வந்து துக்கம் விசாரிப்பதாக சொன்னார் என்கிற தகவலை சொன்னாராம்.
என்ன நம்ம தயாரிப்பில் நடித்த நடிகர்கள் இப்படி வராமல் போய்விட்டார்களே என்று குடும்பமே வருத்தத்தில் இருக்காங்களாம்
மற்ற பெரிய நடிகர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லையாம்... இப்படியும் இருப்பார்களா?.. இதுதான் சினிமா போல!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications