சாந்தனுவோடு ஏற்காட்டில் ஹாலிவுட்டின் “மஞ்சும்மல் பாய்ஸ்”.. யாரெல்லாம் இருக்காங்கன்னு பாருங்க
சென்னை: நடிகர்களான சாந்தனு, விக்ராந்த், பரத், கலையரசன், ஆகியோர் தங்கள் குடும்பத்தினரோடு ஏற்காட்டில் ட்ரெக்கிங் போன புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில் தொகுப்பாளர் டிடியில் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த்தும் இருக்கிறார்.
நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கும் பாக்யராஜின் மகனான சாந்தனு தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருகிறார். 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வந்தாலும் அவருடைய திறமைக்கும் நடிப்புக்கும் தகுந்த அங்கீகாரம் கிடைக்காமல் தான் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் நடித்த சக்கரகட்டி திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதற்கு பிறகு பல திரைப்படங்களில் சாந்தனு நடித்திருந்தாலும் பெரிய அளவில் அது வெற்றி அடையவில்லை. இது சாந்தனுவுக்கு மட்டுமல்லாமல் பல வாரிசு நடிகர்களின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. நடிகர்களின் குழந்தைகள் என்று வரும்போது மக்கள் மத்தியில் அவர்கள் குறித்த எதிர்பார்ப்பு வேறு விதமாக இருப்பதாலேயே இவர்களின் தனித்திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுகிறதோ என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது.
இப்படியான நிலையில் சாந்தனுக்கு பல வருடங்கள் கழித்து அண்மையில் வெளிவந்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் சாந்தனுவுடன் அசோக் செல்வன், கலையரசன், நடிகர் பாண்டியராஜனின் மகனான ப்ரித்வி ஆகியோரும் நடித்திருந்தனர். இதில் பாண்டியராஜனின் மகன் பிரித்வியும் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் அதில் அவருக்கு கிடைக்காத அங்கீகாரம் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் கிடைத்திருந்தது.
இந்த நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் நண்பர்கள் எல்லோரும் இணைந்து ஏற்காடுக்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்று இருக்கின்றனர். அதில் நடிகர்களான பரத், கலையரசன், விக்ரம், ஆதவ் கண்ணதாசன் ஆகியோரும் சுற்றுலாவுக்கு ஃபேமிலியோடு சென்று இருக்கின்றனர். அப்போது ஏற்காட்டில் நண்பர்களோடு சென்ற போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாந்தனு பகிர்ந்திருந்த நிலையில் அது பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

அந்த பதிவில், "நண்பர்களுடன் இயற்கையில் தொலைந்து விட்டோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சென்று வந்தோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். நீங்கள் தான் கோலிவுட் மஞ்சும்மல் பாய்ஸா என்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமான லைக்களை குவித்து வருகிறது. அதே நேரத்தில் இந்த புகைப்படத்தில் தொகுப்பாளினி டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்தம் இருக்கிறார். அது குறித்தும் பல ரசிகர்கள் கமெண்ட்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications