சின்னத்திரையில் பேரிழப்பு! 4 வருஷமா கூட இருந்த நடிகை இல்ல! அகால மரணம்! கதறும் ஜீ தமிழ் கதாநாயகி
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் மாரி கேரக்டரில் நடிக்கும் ஆஷிகா படுகோன் அவரோடு சீரியலில் நடித்த நடிகை பவித்ரா ஜெயராம் மறைவு குறித்து கண்ணீரோடு பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
சீரியல் நடிகை ஆன பவித்ரா ஜெயராம் தெலுங்கு மற்றும் கனடாவில் பாப்புலரான நடிகையாக இருக்கும் நிலையில் அவர் ஹைதராபாத் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவர் பயணித்த கார் மீது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. இது குறித்து சின்னத்திரை வட்டாரத்தில் பலரும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஜீ தமிழில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த மாரி சீரியல் தெலுங்கில் இருந்து தான் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒரிஜினல் வெர்ஷனான "திரிநயனி" என்ற தெலுங்கு சீரியலில் திலோத்தமா என்ற கேரக்டரில் நடிகை பவித்ரா ஜெயராம் நடித்துக் கொண்டிருந்தார். அவரோடு தமிழில் மாரி சீரியலில் மாரியாக நடிக்கும் நடிகை ஆஷிகா படுகோன் தான் தெலுங்கிலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார்.
தமிழில் மாரி சீரியலில் தாரா கேரக்டர் நடித்துக் கொண்டிருப்பது போலத்தான் தெலுங்கில் திலோத்தமா கேரக்டரில் பவித்ரா ஜெயராம் நடித்திருக்கிறார். நான்கு வருடங்களாக ஒரே சீரியலில் ஒன்றாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று பவித்ரா ஜெயராம் மறைவு செய்தியை கேட்டு நடிகை ஆஷா படுகோன் அவரோடு எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.
ஆஷிகா படுகோன் மட்டுமல்லாமல் பவித்ரா ஜெயராமோடு அந்த சீரியலில் நடித்த பல நடிகர்களும் அவருடைய எடுத்த புகைப்படங்கள் மற்றும் அவரைப் பற்றிய இனிமையான நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்கள். ஹைதராபாத் அருகே மெஹ்பூப் நகர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பவித்ரா பலியாகி இருக்கிறார். இவர் பயணம் செய்த கார் மீது பேருந்து மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அதில் நடிகை பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மத்தியில் இருந்த டிவைடர் மீது மோதியதில் காரின் பின்னே வந்த பேருந்து நடிகையின் கார் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பவித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய உறவினர் கார் டிரைவர் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டனர்
அதே நேரத்தில் பவித்ரா ஜெயராம் கனடாவில் ஒளிபரப்பான ஷோகாலி என்ற டிவி சீரியலில் நடிகையாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அதற்கு பிறகு 2018 ல் தெலுங்கு சீரியல்களில் அறிமுகம் ஆகி பல சீரியல்களில் நடித்துள்ளார். அதோடு திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாவில் பிரபலமாக இருந்த பவித்ராவிற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள்.
35 வயதான பவித்ரா ஜெயராம் தனியாக youtube சேனல் ஒன்றே வைத்து இருந்திருக்கிறார். அதில் சூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை அதிகமாக பகிர்ந்து வந்திருக்கிறார். அந்த வீடியோக்களிலும் மாரி சீரியல் நடிகை ஆஷிகா படுகோன் அதிகமாக இடம் பிடித்திருக்கிறார். இந்த நிலையில் நான்கு வருடங்களாக தங்களுடைய சந்தோஷம் துக்கத்தில் இடம் பிடித்த என்னுடைய சகோதரி இன்று இல்லை என்று மாரி சீரியல் நடிகை ஆஷிகா படுகோன் கண்ணீரோடு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் அதிகமாக கருத்துக்களை பெற்று வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications