Hema committee: பேச வேண்டியவங்க பேசணும்.. அபிராமி சொன்ன பாயிண்ட்.. டக்குனு கோபப்பட்ட பரத்
சென்னை: நடிகை அபிராமி, பரத் உட்பட பலர் நடித்த "ஒன்ஸ் அப் ஆன் ய டைம் இன் மெட்ராஸ் (Once Upon A Time In Madras)" என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து நேற்று இந்த படத்திற்கான பிரஸ் மீட் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்கள் அபிராமியிடம் கேட்ட கேள்வியை கேட்டு பரத் கோபப்பட்டு இருக்கிறார். அது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
மலையாள சினிமா உலகில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை, அடிப்படை தேவைகள் போன்ற பல விஷயங்களை கடந்த வாரத்தில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகள் மற்றும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேச தொடங்கி இருக்கிறார்கள்.

பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் மலையாள சினிமா சங்கம் (அம்மா சங்கம்) அதிரடியாக கலைக்கப்பட்டிருக்கிறது. அந்த சங்கத்தின் தலைவராக இருந்த மோகன்லால் உட்பட 17 உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த ஒன்ஸ் அப் ஆன் ய டைம் இன் மெட்ராஸ் திரைப்படத்தின் பிரஸ் மீட்டிங்கில் இது பற்றி நடிகை அபிராமி இடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அபிராமி இது இந்த இடத்தில் கேட்க வேண்டிய கேள்வியா? இது திரைப்படத்திற்கான பிரஸ் மீட்டிங். இங்கே இந்த திரைப்படத்தை பற்றி மட்டும் கேள்வி கேளுங்கள். அதைப்பற்றி சம்பந்தப்பட்டவர்கள் பேசுவார்கள். நிறைய நடிகைகள் ஹேமா கமிட்டி குறித்து பேசி வருகிறார்கள். அதை பேசுவதற்கு வேற மேடை இருக்கிறது. அங்கே இதைப் பேசிக் கொள்ளலாம் என்று சொல்ல, செய்தியாளர்களின் இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத பரத் என்ன இப்படி எல்லாம் இந்த இடத்தில் வந்து கேட்டுட்டு இருக்கீங்க என்று கோபப்பட்டு இருக்கிறார்.

மேடையில் பரத் கோவப்பட்டது அதிகமாக பேசப்படுகிறது. அதற்கு முன்பு பரத்திடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் கேட்டிருந்தனர். அதற்கு சிரித்த முகமாக பரத் பதில் சொல்லி இருந்தார். அதிலும் சினிமா உலகத்திற்கு நீங்க வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது ஆனாலும் நீங்கள் இன்னும் இளமை குறையாமல் அப்படியே இருக்கிறீர்களே அதற்கு ரகசியம் என்ன என்று கேட்கப்பட்டது.
அதற்கு பரத் ஒரு பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை. டென்ஷன் இல்லாத வாழ்க்கை தான். நான் அதிகமாக எதையும் மண்டையில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். இருக்கிறதை வைத்து அப்படியே வாழ்ந்து விட்டு போய்விட வேண்டும். ஆரோக்கியமான சாப்பாடு மற்றும் உடற்பயிற்சியை முறையாக செய்ய வேண்டும் அவ்வளவுதான் என்று சொல்லி இருந்தார்.

அதுபோல பல திரைப்பட பிரஸ் மீட்டிங்கில் நடிகர்கள்தான் அதிகமாக இருப்பார்கள். ஒரு சில நடிகைகள் இருப்பார்கள். ஆனால் இந்த திரைப்படத்தில் அதிக நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களோடு நீங்கள் உட்கார்ந்திருப்பது பற்றி சொல்லுங்க என்று கேட்ட கேள்விக்கு அதற்கும் சிரித்த முகமாக எத்தனை நடிகைகள் உடன் நடித்தாலும் வீட்டில் ஒரு மனைவி தான் இருக்க முடியும். எல்லோரையும் பார்க்க மட்டும் தான் முடியும் நான் இவர்கள் எல்லோரோடும் நடிக்கவில்லை, ஒரே ஒரு நடிகையோடு தான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். இது நான்கு விதமான காதல் கதை உள்ள படம் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications