சொல்றது ஒன்னு ஆனால் செய்வது வேறு! அக்கா மீது பகீர் குற்றச்சாட்டு வைத்த அதிதி.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்
சென்னை: சமீபத்தில் இயக்குனர் சங்கரின் மூத்த மகள் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் இணையத்தில் சங்கர் குடும்ப புகைப்படங்கள் மற்றும் அவருடைய மகளின் திருமண சர்ச்சைகள் தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய அக்கா குறித்து நடிகை அதீதி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தன்னுடைய அக்காவோடு தான் ஹோட்டலுக்கு செல்லும்போது தனக்கு ஏற்படும் மன கஷ்டங்கள் குறித்து வேதனையோடு அதீதி பேசியிருக்கிறார். அதை பார்த்த அதிகமான ரசிகர்கள் இந்த மாதிரி கஷ்டமான சூழ்நிலை எங்களுக்கும் நடந்திருக்கிறது என்று தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு பெயர் போன இயக்குனர் சங்கருக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. இவர் இயக்கும் திரைப்படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. அதனாலேயே இயக்குனர் சங்கர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டால் போதும் என்று பல நடிகர் நடிகைகள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
அதோடு முன்னணி நடிகர்கள் வைத்து பல கோடி செலவில் பல திரைப்படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் சங்கரின் மூத்த மகளின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. ஏற்கனவே சங்கரின் மகளுக்கு பிரபல கிரிக்கெட் பிரபலம் ஒருவரோடு திருமணம் நடைபெற்று இருந்த நிலையில் சில மாதங்களிலேயே அந்த கிரிக்கெட் பிரபலத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்கரின் மகள் விவாகரத்து பெற்றுவிட்டார்.
விவாகரத்து பெற்றதும் அடுத்த வேலையாக அவருக்கு இரண்டாவது திருமணத்தையும் பிரம்மாண்டமாக சங்கர் செய்து வைத்திருக்கிறார். இதனால் இது பற்றி இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சங்கரின் இரண்டாவது மகளான அதீதி சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் தன்னுடைய அக்கா குறித்து பேசி இருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் நானும் என்னுடைய அக்காவும் ஹோட்டலுக்கு சாப்பிட போனால் அக்கா பண்றது பார்க்கும்போது எனக்கு செமையா கோபம் வரும். ஏன்னா அவாளிடம் நான் சாப்பாடு ஏதாவது ஆர்டர் பண்ணவானு கேட்டா வேண்டாம் என்று சொல்லிடுவா. பிறகு நான் எனக்கு பிடிச்சதை ஆர்டர் பண்ணி வச்சா அதிலிருந்து ஒவ்வொன்றாய் எடுத்து சாப்பிட்டுருவா. அதுபோல அக்கா மட்டுமல்ல என்னுடைய தம்பியும் அதே வேலையை தான் பார்ப்பான்.

அது எனக்கு ரொம்பவே கோபம் வரும் அதனாலதான் நான் எங்க அக்கா மற்றும் தம்பியோடு அடிக்கடி சண்டை போடுவேன். நாங்க சண்டை போடுற ஒரே விஷயம் சாப்பாட்டுக்காக தான் இருக்கும் என்று வேதனையோடு அதில் அதீதி பேசியிருக்கும் நிலையில் இந்த வீடியோவிற்கு அதிகமான ரசிகர்கள் அதீதிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அதில் பலர் எங்க வீட்டிலேயே இந்த மாதிரி தான் நிலைமை இருக்கிறது என்று பகிர்ந்திருக்கிறார்கள்.
அதிலும் இன்னும் ஒரு சில ரசிகர்கள் உங்களுக்காவது பரவாயில்லை எனக்கு என் கூட சேர்ந்த நண்பர்கள் எல்லாருமே இப்படியே இருக்கானுங்க, நம்ம கேட்கும் போது வேண்டாம் என்று சொல்கிறது... பிறகு சரி நம்ம சாப்பிடலாம் என்று ஆர்டர் பண்ணுனா நமக்கு ஒரு வாய் கூட தர மாட்டானுங்க என்று புலம்பி கொண்டிருக்கின்றனர்.
திரைப்படங்களில் க்யூட்டாக இருக்கும் அதீதிக்கு அதிகமான இளைஞர்கள் ரசிகர்களாக இருக்கும் நிலையில் தன்னுடைய அக்கா மற்றும் தம்பியால் தான் பிடித்த சாப்பாட்டை சாப்பிட முடியாமல் இருக்கும் வேதனையை அதீதி தெரிவித்திருக்கும் நிலையில் அதற்கு அதிகமான ரசிகர்கள் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications