சிம்புவை தொடர்ந்து வெங்கல் ராவிற்கு நிதி உதவி செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. அதுவும் எவ்வளவு தெரியுமா?
சென்னை: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் சில தினங்களுக்கு முன்பு தனக்கு கை, கால் செயலிழந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சைக்கு பணவசதி இல்லாமல் தான் தவிப்பதால் நடிகர்கள் உதவி செய்யும்படி வேண்டி வீடியோ வெளியிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு நடிகர் சிம்பு உட்பட ஒரு சிலர் உதவி செய்திருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னால் முடிந்த அளவிற்கு நிதி உதவி வழங்கியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வெங்கல் ராவ் நடித்திருக்கிறார். நடிகர் வடிவேலுவுடன் 30க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்த வெங்கல் ராவ் நடித்திருக்கிறார். அதிலும் வடிவேலுவுடன் இவருடைய நடிப்பை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்து விட முடியாது. ஒவ்வொரு காட்சிகளிலும் இவருடைய முக அசைவு மற்றும் மொட்டை தலை பார்ப்பவர்களை டக் என்று சிரிக்க வைத்து விடும்.

ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாக வெங்கல்ராவை சினிமாவில் பார்க்க முடியவில்லை அதற்கு காரணம் 2022 ஆம் ஆண்டு சிறுநீரக பிரச்சனைகள் பாதிக்கப்பட்டதுதான். அதற்காக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இந்த நிலையில் தான் தற்போது அவருக்கு ஒரு கை கால் செயலிழந்து இருக்கிறது.
இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் வெங்கல் ராவ் உதவி கேட்டு வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் வெங்கல் ராவ் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர்தான்.
ஆரம்பத்தில் ஸ்டண்ட் கலைஞராக சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு டூப் போட்டு இருக்கிறார். அப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் வெங்கல் ராவிற்க்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஸ்டண்ட் செய்வதை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
அதிலும் வடிவேலு ஒரு படத்தில் கோவில் வாசலில் தேங்காய் விற்கும் போது இவர் தேங்காய் வாங்க வரும்போது வெங்கல் ராவ் மற்றும் வடிவேலு இருவரும் பேரம் பேசும் காமெடி பெரிய அளவில் பலரையும் கவர்ந்தது. அதுபோல பல காமெடி வடிவேலுவுடன் இவர் நடித்திருந்தாலும் இப்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவர் அந்த வீடியோவில் உருக்கமாக பேசியிருந்தார்.
எனக்கு கை, கால்கள் செயல்படவில்லை. நடக்கவும் பேசவும் முடியவில்லை. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல போதுமான பண வசதி இல்லை. திரைத்துறையை சார்ந்தவர்கள், நடிகர் சங்கங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் இந்த வீடியோ வெளியாகி சில தினங்களை கடந்து விட்ட நிலையில் நடிகர் சிம்பு 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கிறார். அதுபோல நடிகர் கேபிஒய் பாலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கிறார். இதுபோல பலரும் நிதி உதவி வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுதல் வைத்து வருகிறார்கள். அதோடு நிதி உதவி வழங்கியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விரைவில் வெங்கல் ராவ் உடல் நலம் பெற்று மீண்டும் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications