நடிகர் தம்பி ராமையாவின் பிறந்தநாளை கொண்டாடிய ஆலியா மானசா.. பழைய செம்பா வந்தாச்சு!
சென்னை: நடிகை ஆலியா மானசா நடிகர் தம்பி ராமையாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை ஆலியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவில் பட்டுப்புடவை கட்டி ஆலியா மானசா மணப்பெண் போல இருப்பதை பார்த்து ரசிகர்கள் கருத்துக்களை குவித்து வருகிறார்கள் அது பற்றி பார்க்கலாம்.
நடிகை ஆலியா மானசா விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாக இருந்தாலும் அதற்கு முன்பே டான்ஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலம் அடைந்திருக்கிறார். அதன் மூலமாகத்தான் ஆலியாவிற்கு ராஜா ராணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்புக்காக ஆலியா ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்.

கோவில் திருவிழாக்கள் மற்றும் முக்கியமான பங்க்ஷன்களில் கூட ஆலியா டான்ஸ் ஆடி இருக்கிறார். அந்த வீடியோக்கள் இப்போதும் கூட இணையத்தில் வலம் வருகிறது. இந்த நிலையில் தான் ராஜா ராணி சீரியலில் தன்னோடு நடித்த சஞ்சீவை ஆலியா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
குழந்தைகள் பிறந்த பிறகு உடல் எடை கூடி இருந்த ஆலியா தீவிர உடற்பயிற்சி காரணமாக மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இப்போது சன் டிவியில் இனியா சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல சமீபத்தில் தான் பிரமாண்டமான வீடு ஒன்றைக் கட்டி அதன் கிரகப்பிரவேசம் நடத்தி இருந்தார். இந்த நிலையில் சீரியலில் மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் சீரியஸாக ஆலியா நடித்துக் கொண்டிருக்கிறார்.
வீடு கட்டுவதற்காக அதிகமாக கடன் வாங்கி இருப்பதாக ஏற்கனவே ஆலியா பேட்டிகளில் சொல்லியிருந்தார். அதுபோல இப்போது அதிகமான விளம்பரங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் விளம்பர சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து எடுத்த வீடியோ ஒன்றை ஆலியாயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் நடிகர் தம்பி ராமையாவின் பிறந்தநாளை அந்த செட்டில் வைத்து எல்லோரும் கொண்டாடி இருக்கிறார்கள். தம்பி ராமையாவிற்க்கு வாழ்த்து தெரிவித்த ஆலியா அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர இந்த வீடியோ அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது. நடிகர் தம்பி ராமையா சமீபத்தில் தான் தன்னுடைய மகன் உமாபதிக்கு நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து வைத்திருந்தார்.
இவர்களுடைய செய்திகளும் புகைப்படங்களும் இணையத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தம்பி ராமையாவின் பிறந்தநாள் சூட்டிங் ஸ்பாட்டில் எளிமையாக கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து தம்பி ராமையாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications