மாலத்தீவில் பிரம்மாண்டமாக மகனின் பிறந்த நாளை கொண்டாடிய ஆலியா.. கன்னத்தில் விழுந்த அடி..!
சென்னை: சீரியல் நடிகை ஆலியா மானசா தன்னுடைய மகனின் பிறந்த நாளை கொண்டாடி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
ஆலியா மனசா தன்னுடைய மகனின் முதல் பிறந்த நாளில் குழந்தையோடு குழந்தையாக கடற்கரையில் ஆட்டம் போட்டு இருக்கிறார்.
ஆலியா மனசாவின் கணவர் சஞ்சீவ் குழந்தையின் பிறந்தநாளில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

காதல் திருமணம்
விஜய் டிவில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக சின்னத்திரையில் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட ஆலியா மானசா முதல் சீரியலில் செம்பா கேரக்டரில் ரசிகர்களின் மனதில் பசை போல ஒட்டிக்கொண்டார். ஆனால் முதல் சீரியலிலே இவர் சீரியல் கதாநாயகன் சஞ்சீவுடன் காதல் திருமணம் செய்து கொண்டார். இருவருடைய வீட்டிலும் ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பினாலும் பிறகு சஞ்சீவ் வீட்டில் சம்மதத்தோடு திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தீவிரமான விடா முயற்சி
திருமணத்திற்குப் பிறகு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக மாறிய ஆலியா மானசா உடல் எடை கூறிய கூடி இருந்தாலும் தன்னால் பழைய நிலைக்கு வர முடியும் என்று வெறித்தனமான ஒர்க் அவுட் மூலமாக தற்போது மீண்டும் இனியா சீரியலில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். பெண் அடிமைத்தனத்தை எதிர்த்து போல்டாக கேள்வி கேட்கும் ஒரு கேரக்டரில் இனியாவாகவே ரசிகர்களின் மனதில் ஒட்டிக்கொண்டார் முதல் சீரியலில் செம்பாவாக அமைதியாக பார்த்த ஆலியாவா இது என்று ரசிகர்கள் வியந்து போய் இருக்கின்றனர்.

முதல் பிறந்தநாள்
இந்த நிலையில் கணவன் மற்றும் மனைவி இருவருமே சன் டிவி சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய மகனின் முதல் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு வீட்டில் கேக் வெட்டி உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு புகைப்படங்களை எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாகி இருந்தனர். இந்த நிலையில் தற்போது விடுமுறையை கொண்டாட மாலத்தீவுக்கு குடும்பத்தோடு கிளம்பிப் போயிருக்கின்றனர்.

மாலத்தீவில் கொண்டாட்டம்
நடிகை ஆலியா மனசா தன்னுடைய குழந்தைகளோடு மாலத்தீவில் செய்யும் சேட்டைகள் மற்றும் விளையாட்டுகளை அப்படியே புகைப்படங்கள் மற்றும் வீடியோவாக எடுத்து பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது ஆலியா மானசாவின் மகன் அவருடைய கன்னத்தில் அடித்த வீடியோ ஒன்றை ஆலியா மானசாவின் கணவரான சஞ்சீவ் பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் இதுவும் க்யூட்டாக அழகாகத் தான் இருக்கிறது என்று பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications