நீலம் யூனிஃபார்மில் மகன் பிறந்த நாளை பிரம்மாண்டமாக மாலத்தீவில் கொண்டாடிய ஆலியா..கடைசியில் நெகிழ்ச்சி
சென்னை: நடிகை ஆலியா மானசா தன்னுடைய மகன் பிறந்த நாளை குடும்பத்தோடு மாலத்தீவில் கொண்டாடி இருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்களை கொண்டிருக்கும் ஆலியா மானசா தன்னுடைய மகன் பிறந்தநாள் வீடியோவை தன்னுடைய youtube சேனலில் பதிவிட்டு இருக்கிறார்.
நீல நிற உடையில் குடும்பத்தோடு ஆலியா மானசா மாலத்தீவில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.

சன் டிவி இனியா
விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலமாக சின்னத்திரை ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்த ஆலியா மானசா திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக ஆன பிறகு மீண்டும் இனியா சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்து கொண்டிருக்கிறார். இனியா சீரியலில் ஆலியா மானசா அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு தற்போது இனியா சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சீரியலில் நடிப்பு ஒரு பக்கம் என்றால், எனக்கு இன்னொரு பக்கம் என்னுடைய குடும்பம் என்று ஆலியா அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்தடுத்த குழந்தைகள்
பல நடிகைகள் காதலித்து திருமணம் செய்து இருந்தாலும் குழந்தைகள் விஷயத்தில் பொறுமையாக வருடங்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஆலியா மானசா டாப் கதாநாயகியாக இருக்கும்போதே அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக மாறி இருக்கிறார் இவர் அம்மாவாக மாறிவிட்டார். அதனால் இனி இவருக்கு மார்க்கெட் இருக்காது என்று பலரும் பேசிக் கொண்டிருந்தனர். அதுவும் குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி அவரா இவர் என்று சொல்லும் அளவிற்கு ஆலியா மாறி இருந்தது சமூக வலைத்தளத்தில் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

விடா முயற்சி
இந்த நிலையில் இரண்டு குழந்தைகளும் ஆப்ரேஷன் மூலமாக பிறந்திருந்தாலும் தன்னுடைய விடா முயற்சியாலும் உடல் பயிற்சியாலும் ஆலியா மானசா மீண்டும் தன்னுடைய உடல் எடையை குறைத்து தற்போது பழைய நிலையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய இரண்டாவது மகனின் பிறந்த நாளை மாலத்தீவில் தன்னுடைய குடும்பத்தோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறார். ஆலியா மானசாவின் மகளின் பிறந்தநாளை சில வாரங்களுக்கு முன்புதான் சென்னையில் அவருடைய வீட்டில் கொண்டாடி இருந்தார்.

முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்த நிலையில் தன்னுடைய மகன் அர்ஷ் பிறந்த நாளில் மாலத்தீவில் மொத்த குடும்பமும் நீல நிற உடையில் கடற்கரை காற்று வாங்கியபடியே கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். இரவு நேரத்தில் அனைவரும் சாப்பாடு சாப்பிட்டபடியே பல நினைவுகளை பேசி மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது ஆலியா மானசாவின் உறவினர் ஒருவர் கடந்த வருடத்தில் இதே நாளில் ஆலியாவிற்கு பையன் பிறந்த நேரத்தில் குறும்பா பாடலை காரில் போட்டு ரசித்தபடி இருந்தோம். ஆனால் இப்போது அதே சேட்டைகளை அர்ஸ் செய்து கொண்டிருக்கிறான். நாட்கள் படபடவென்று போய்விட்டது என்று மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.
-
பாக்ஸுக்குள் இருந்த வைரக்கல்... பாரதிராஜாவின் அந்த ஒரு முடிவால் ராதாரவிக்கு ஏற்பட்ட வருத்தம் என்ன? -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர் -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன் -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications