கனவு இல்லத்தை கட்டி முடித்த ஆலியா-சஞ்சீவ்.. புது வீட்டில் இத்தனை வசதிகளா? வந்து குவிந்த பிரபலங்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதி தாங்கள் புதியதாக கட்டிய வீட்டின் வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர். அதோடு தங்களுடைய வீட்டின் கிரகப்பிரவேசம் விரைவில் இருக்கும் நிலையில் அதற்கு முன்பே பல பிரபலங்கள் தங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருவதையும் புகைப்படங்களோடு ஆலியா தெரிவித்து இருக்கிறார்.
சின்னத்திரையில் டாப் நடிகையாக வளர்ந்து கொண்டு இருப்பவர்தான் ஆலியா மானசா. இவர் ராஜா ராணி சீரியலில் செம்பா கேரக்டரில் பல இளைஞர்களின் தூக்கத்தை தொலைக்க வைத்தவர். முதல் சீரியலிலேயே அதிகமான இளைஞர்களையும் தன்னுடைய ரசிகர்களாக மாற்றிய ஆலியா மானசா அந்த சீரியலில் தன்னோடு கதாநாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

ஆலியா மானசா ராஜா ராணி சீரியலுக்கு முன்பு மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய நடன திறமையை காட்டி இருந்தார். அந்த நிகழ்ச்சி முடிவுக்கு பிறகு தான் ஆலியா மானசாவிற்கு ராஜா ராணி சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் திரைப்படங்களின் வாய்ப்பு வந்த போதும் ஆலியா மானசா தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக தான் சின்னத்திரையை தேர்ந்தெடுத்ததாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
முதல் சீரியல் முடிவடையும் போதே சஞ்சீவை திருமணம் செய்து கொண்ட நிலையில் அதைத்தொடர்ந்து ஐலா என்ற குழந்தைக்கு அம்மாவாகவும் மாறிவிட்டார். அடுத்ததாக ராஜா ராணி சீசன் 2வில் நடித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாவது குழந்தையும் பிறந்து இருந்த நிலையில் சில மாதங்கள் நடிப்பிற்கு பிரேக் விட்டு மீண்டும் சன் டிவியில் இனியா சீரியல் மூலமாக தன்னுடைய நடிப்பை தொடங்கி இருக்கிறார்.
அதே நேரத்தில் சஞ்சீவ் சன் டிவியில் கயல் சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். கணவன் மனைவி இருவரும் சீரியல், விளம்பரங்கள், ஷார்ட் பிலிம் என்று பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பல வருடங்களாக தாங்கள் நினைத்திருந்த வீடு இப்போது கட்டி முடித்து இருக்கிறோம் என்று தங்களுடைய வீட்டு புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள்.இதுதான் இப்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
ஆலியா மானசா அந்த வீட்டை கட்டுவதற்கு தோராயமாக ஒற்றை கோடி செலவு ஆகி இருக்கும் என்று கூறி இருக்கிறார். எதையும் நாங்கள் கணக்கு வைத்து செலவு செய்யவில்லை. நாங்கள் ஏதாவது சூட்டுக்கு போய்விட்டு வரும்போது கிடைக்கும் சம்பளத்தை அப்படியே இங்கே வேலை நடக்கும் போது கொடுத்து விடுவோம். அதனால் எவ்வளவு செலவழித்து இருக்கிறோம் என்று எங்கள் இருவருக்குமே துல்லியமாக தெரியாது என்று ஆலியா மற்றும் அவருடைய கணவர் சொல்லி இருக்கிறார்கள்.
அதோடு தங்களுடைய வீட்டில் பிரம்மாண்டமான சமையலறை மற்றும் லிப்ட் வசதி வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். அதோடு மாடியில் ஒரு ஆடிட்டோரியம் என்று கலை நயத்தோடு பெரிய பங்களா போல வீட்டை கட்டி முடித்து இருக்கிறார்கள். வீட்டின் மொட்டைமாடியில் இருந்து பார்க்கும்போது பக்கத்தில் இருக்கும் குளம் அருமையாக காட்சியளிக்கிறது.
குளம் மற்றும் இயற்கையை ரசித்தப்படியே நேரத்தை செலவிடும் வகையில் குழந்தைகளுக்கு மாடியில் விளையாட்டு அறையும் வைத்திருக்கிறார்கள். அதுபோல வீட்டில் அதிகமாக கண்ணாடி வைத்து வேலைப்பாடுகள் செய்து இருக்கிறார்கள். கூடவே ஒவ்வொரு அரைக்கும் பெரிய ஏசி அமைத்திருப்பதால் வெயில் காலத்தில் வெயில் கொடுமை இருக்காது என்றும் கூறியிருக்கிறார்கள்.
இவர்களுடைய வீட்டின் கிரகப்பிரவேசம் இன்னும் ஒரு சில நாளில் நடக்க இருக்கிறது என்று ஆலியா கூறி இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக பல பிரபலங்கள் ஆலியா வீட்டை பார்வையிட்டு அவருக்கு கிப்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் கலா மாஸ்டர் மற்றும் சீரியல் நடிகை ஹேமா பிந்து போன்ற பலரும் ஆலியா மானசாவின் வீட்டிற்கு வருகை தந்திருக்கிறார்கள். அந்த புகைப்படத்தையும் ஆலியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ஆலியாவின் இந்த வளர்ச்சிக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications