சீரியலில் களம் இறங்கிய ஆலியா மானசாவின் மகள்..எந்த சீரியலில் தெரியுமா? குடும்பமே ஒரே சேனலில் நடிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை ஜோடியாக இருந்து வரும் நடிகை ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இருவரும் சன் டிவி சீரியல்களில் நடித்து வருகின்றனர்.

முதல்முறையாக நடிகை ஆலியா மானசாவின் மகளும் சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார்.

தன்னுடைய அப்பாவான சஞ்சீவ் கார்த்திக் நடிக்கும் கயல் சீரியலில் முதல் முறையாக ஐலா பாப்பா நடித்திருக்கிறார்.

திருமணமும் குழந்தைகளும்

திருமணமும் குழந்தைகளும்

சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட சின்னத்திரை பிரபலங்கள்தான் நடிகை ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலமாக ஒன்றாக நடித்து வந்தனர். சீரியலில் ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் நிஜ ஜோடியாகவும் மாறி இருந்தனர். நாங்கள் காதல் தம்பதிகளாக எப்போதும் வலம் வருவோம் என்று இவர்கள் இப்போதும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது அவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஷ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

சீரியலில் நடிப்பு

சீரியலில் நடிப்பு

ராஜா ராணி சீரியலுக்கு பிறகு நடிகை ஆலியா மானசா முதல் குழந்தை பிறந்ததால் சில மாதங்கள் நடிக்க வராமல் இருந்த நிலையில், பிறகு ராஜா ராணி சீசன் 2வில் நடித்து வந்தார். அதற்கு பிறகு இரண்டாவது முறையாக அவர் கர்ப்பமாக இருந்ததால் அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். இப்போது சில மாதங்கள் கழித்து மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

குழந்தையின் நடிப்பு

குழந்தையின் நடிப்பு

இந்த நிலையில் ஆலியா மானசாவின் கணவரான சஞ்சீவ் கார்த்திக் ராஜா ராணி சீரியலுக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியலில் தான் ஐலாவும் நடித்திருக்கிறார். நேற்றைய எபிசோடில் எழில் கனவு காண்பது போன்றும், அதில் எழிலுக்கும், கயலுக்கும் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருப்பது போன்றும், இவர்களுக்கு பின்னணியில்," உன்னாலே உன்னாலே என் ஜீவன் வாழுதே" என்ற விஜய் திரைப்படத்தின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இதில் எழில் மற்றும் கயலின் குழந்தையாக ஐலா பாப்பாவும் நடித்திருக்கிறார். தற்போது இதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அப்பாவும் மகளும் நடிப்பு

அப்பாவும் மகளும் நடிப்பு

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆலியா மானசா தன்னுடைய குழந்தைகளோடு அடிக்கடி வீடியோ எடுத்து வெளியிட்டு கொண்டிருப்பார். தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையோடு ஆலியா மானசா வெளியிடும் க்யூட் வீடியோக்கள் அதிகமாக ரசிகர்களை கவர்ந்திருக்கும். அந்த வகையில் தற்போது முதல் முறையாக ஆலியா மானசாவின் குழந்தை ஐலாவும் சீரியலில் அறிமுகம் ஆகி இருக்கும் நிலையில், அப்பாவும் மகளும் ஒரே சீரியலில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்து ஆலியாவின் மகனும் நடிக்க வந்து விடுவாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+