நடிகை அமலா மகன் அகில் கல்யாணத்தில் இப்படியொரு ஹைலைட்? அந்த சாப்பாட்டு தட்டில் மெனு பாருங்க! சூப்பர்ல
சென்னை: பிரபல நடிகர் நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகனான அகில் அக்கினேனிக்கும் ஜைனப் ரவ்ட்ஜி என்பவருக்கும் கடந்த ஜூன் 6-ம் தேதி திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.. ஏராளமான திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், விஐபிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தனர்.. இந்நிலையில், அகில் கல்யாணத்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகள் தற்போது, இணையத்தில் வைரலாகி, அனைவருக்கும் வியப்பை தந்து வருகிறது.
சமீபத்தில்தான் பிரபல நடிகர் நாகார்ஜுனா - நடிகை அமலா தம்பதியினரின் மூத்த மகனான நாக சைதன்யா - சோபிதா துலிபாலா இருவரின் திருமணமும் பிரம்மாண்டமாக நடந்தது..

இந்த திருமணம் நடந்து முடிந்தும்கூட, சோபிதாவின் விதவிதமான நகைகள் முதல் அத்தனை திருமண சிறப்புகளும் இணையத்தில் வைரலாகி கொண்டிருந்தன.
சோபிதாவின் உடைகள், நகைகள்
இப்போது, நாகார்ஜூனாவின் இளைய மகனான அகில் அக்கினேனி - ஜைனப் ரவ்ட்ஜி இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.. ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவில் வீட்டிலேயே மிக மிக எளிமையாக இந்த திருமணம் நடைபெற்றது.. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.
ஆனால் இந்த திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை நாகார்ஜூனா குடும்பத்தினர் வெளியிடவில்லை..
அமலாவும், நானும்..
திருமணம் முடிந்தபிறகு நாகார்ஜூனா தன்னுடைய பதிவில், புதுமணத் தம்பதிகளின் படத்தை பகிர்ந்து, "மிகுந்த மகிழ்ச்சியுடன், அமலாவும் நானும் எங்கள் அன்பு மகன், தனது அன்புக்குரிய ஜைனப்பை எங்கள் வீட்டில் நடந்த அழகான விழாவில் திருமணம் செய்து கொண்டார் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம், எங்கள் இதயங்கள் சொந்தமானது" என்று பதிவிட்டிருந்தார்.
பிறகு, கடந்த 8ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனா குடும்பத்தினருக்குச் சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.. இது ஒரு காதல் திருமணமாகும்.. 3 வருடங்களாக அகில், ஜைனப் இருவரும் காதலித்து வந்தார்களாம். மணமகள் ஜைனப் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுல்பி ராவ்ஜி என்பவரின் மகள் ஆவார். தற்போது மும்பையில் ஓவியராகவும், சென்ட் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார் ஜைனப்.
சோபிதா- சைதன்யா
திருமணம், வரவேற்பு நடந்து முடிந்து இத்தனை நாள் கழித்தும், சைதன்யா - சோபிதா திருமணம் போலவே, இவர்கள் இருவரின் திருமணமும் இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது..
குறிப்பாக, கல்யாண சாப்பாடுதான், வியப்பை கூட்டி வருகிறது.. சாப்பாடு தயார் செய்த, பிரபல கேட்டரிங் சர்வீஸ், திருமண நாளன்று பரிமாறிய மெனுவை, தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறது. முழுக்க முழுக்க சைவ உணவு மட்டுமே அகில் கல்யாணத்தில் பரிமாறப்பட்டதாம்.
விதவிதமான தோசைகள்
நெய் காரம் தோசை, நெய் காரம் மசாலா தோசை, நெய் காரம் உப்புமா தோசை, நெய் இட்லி, நெய் பொங்கல், வடை, உப்புமா, குலாப் ஜாமூன், ஃபில்டர் காஃபி, மாம்பழ ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ், தர்பூசணி ஜூஸ் உள்ளிட்ட பல்வேறு ஷேக்குகளும் உணவுகளாக பரிமாறப்பட்டுள்ளன..
பலவகையான டிபன் வகைகள் இருந்தாலும், பல்வேறு வகையான தோசைகள் இருந்ததுதான் ஹைலைட்டாக பார்க்கப்பட்டதாம்.. இந்த உணவுகளை நாகார்ஜுனா குடும்பத்தினர் ரசித்து ருசித்து சாப்பிடும் போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications