உங்களை மாதிரி ஆளுங்களால தான், இங்க வந்து நிற்கிறோம்! நடிகை அம்பிகா சொன்ன வார்த்தை.. கதறி அழுத பெண்
சென்னை: தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இப்ப வரைக்கும் தமிழ் சினிமா மற்றும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அம்பிகா சமீபத்தில் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று இருக்கிறார். அப்போது அங்கு இருந்த ஒரு பெண் பக்தர் உடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இருக்கிறார். அந்தப் பெண் அம்பிகாவை பார்த்ததும் கண்கலங்கி அழுது இருக்கிறார். அவரிடம் உங்களை மாதிரி ஆளுங்களால தான் நாங்க இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம் என்று அம்பிகா நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் திருமணத்திற்கு பிறகு அக்கா, அண்ணி கேரக்டரில் நடிக்க தொடங்கி விடுவார்கள். அதிலும் சில வருடங்களுக்கு பிறகு கதாநாயகன், கதாநாயகிக்கு அம்மாவாகவும், பாட்டியாகவும் நடிக்க தொடங்கி விடுவார்கள். அது போல தான் நடிகை அம்பிகாவும் ஆரம்பத்தில் நடிகர் கமல்ஹாசன் ரஜினிகாந்த் போன்றவருக்கு கதாநாயகியாக நடித்து இப்போது சினிமா மற்றும் சீரியல்களில் பாட்டி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சீரியலில் நடிப்பு
ஆனால் தனக்கு வயதானாலும் எனர்ஜி மட்டும் குறையவே இல்லை என்று இவர் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியலில் கதாநாயகனின் பாட்டியாக கலக்கி கொண்டு இருக்கிறார். அவர் சமீபத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய போயிருக்கிறார். அப்போது வழக்கம் போல கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த அம்பிகா செய்தியாளர்களை சந்தித்து இருந்தார்.
கண் கலங்கிய ரசிகை
அதற்கு முன்பு அங்கிருந்த சில பக்தர்களுடன் சேர்ந்து போட்டோவும் எடுத்து இருந்தார். அப்போது ஒரு பெண் அம்பிகாவை பார்த்ததும் கண்கலங்கி இருத்தார். அவரை கட்டிப்பிடித்து அவரோடு புகைப்படங்களை எடுத்துக் கொண்ட அம்பிகா நீங்க எதுக்காக அழுறீங்க கண்கலங்க கூடாது, ஆனந்த கண்ணீர் விடலாம் ஆனால் கஷ்டப்பட்டு கண்ணீர் விடக்கூடாது என்று சொன்னதும், அந்தப் பெண் உங்களை பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று சொல்கிறார்.

அம்பிகா சொன்ன வார்த்தை
அதற்கு அம்பிகா உங்களை மாதிரி ஆளுங்களால தான் நாங்க இன்னைக்கு இந்த நிலைமையில் இருக்கிறோம். அதற்கு ரொம்ப நன்றிங்க என்று சொல்லியிருந்தார். பிறகு வந்து செய்தியாளர்கள் சந்தித்து பேசியிருந்தார். அதில் திருவண்ணாமலை எனக்கு பிடித்த இடம் எங்கே வந்தால் மனம் அமைதியாக இருக்கும் என்று சொல்லி இருந்தார். அப்போது அரசியலுக்கு வரலாம்னு யோசனை இருக்கா? என்று அங்கிருந்த செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அம்பிகா "எனக்கு அரசியல் ரொம்பவே பிடிக்கும். ஆனால் எந்த கட்சியில் சேரப் போறேன்னு பிறகு சொல்கிறேன் என்று ஜாலியாக பேசி இருந்தார். இதனால் அம்பிகா எந்த கட்சியில் சேரப் போகிறார் என்ற விவாதம் எழுந்து இருக்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications