ஆசைப்பட்ட அம்பிகா.. அத்தனையும் போச்சே.. அந்த குதிரை தரதரனு இழுத்துட்டே போச்சாமே.. சிவக்குமார் கிரேட்
சென்னை: மைசூரில் தனக்கு ஏற்பட்ட எதிர்பாராத குதிரை விபத்து பற்றியும், ரஜினி, கமலுடன் நடித்தபோது ஏற்பட்ட மறக்க முடியாத தருணங்களை பற்றியும் நடிகை அம்பிகா தந்திருக்கும் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதேபோல, தன்னுடைய ஒரே ஆசை இதுதான் என்று மனம்திறந்து அந்த பேட்டியில் பேசியிருக்கிறார் நடிகை அம்பிகா.
கேரளத்தில் பிறந்த வளர்ந்த அம்பிகா 1979-ம் ஆண்டு தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமானவர்.. சக்களத்தி என்ற படத்தில் முதன்முதலில் தோன்றி நடித்தார்.. அதற்கு பிறகு அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் சேர்ந்து நடித்துவிட்டார்.. திரையுலகம் வந்து 40 வருடங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இன்றைக்கும் படங்களிலும் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகை அம்பிகா: பல்வேறு சேனல்களுக்கு அம்பிகா அவ்வப்போது பேட்டிகளை தந்துவருகிறார்.. இந்த பேட்டிகள் அவ்வப்போது சோஷியல் மீடியாவிலும் வைரலாகிவிடும்.. அப்படித்தான் அம்பிகாவின் பேட்டிகள் இணையத்தில் வட்டமடிக்க துவங்கி உள்ளன.
ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார், "மாவீரன்'' படத்தில் நடிக்கும்போது, பெரிய விபத்தில் சிக்கிவிட்டேன்.. இந்தப் படத்தில் வரும் "நீ கொடுத்ததை தருவேன்'' என்ற பாடல் காட்சி, மைசூரில் ஷூட் செய்யப்பட்டது.. ரஜினிகாந்த் வேகமாக குதிரையில் செல்லும்போது, என்னையும் தூக்கி குதிரையில் உட்கார வைத்துக்கொண்டு போக வேண்டும்.
நைலான் துணி: அப்போது, நைலான் துணியில் தைத்த உடையை எனக்கு கொடுத்திருந்தார்கள்.. குதிரையில் ஏறியபோது, துணி வழுக்கி நான் கீழே விழுந்துவிட்டேன்.. குதிரை சிறிது தூரம் என்னை இழுத்துக் கொண்டே சென்றது.. எல்லாருமே இதைப்பார்த்து பதறிவிட்டார்கள்.. நல்லவேளையாக, காயத்துடன் தப்பினேன்'' என்று அதிர்ச்சி விலகாமல் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல மற்றொரு சேனலுக்கு அளித்த பேட்டியில், காக்கிச்சட்டை படத்தில், "வானிலே தேனிலா" சாங் ஷூட்டில் நடந்து கொண்டிருந்தது.. அப்போது கமலும், அம்பிகாவும் சேர்ந்து ஆடுவதுதான் சீன் பிளான் செய்யப்பட்டிருந்ததாம். ஆனால், நேரம் குறைவாக இருந்ததால், "நான் இந்த ஸ்டெப்பை போட்டா, லேட்டாகி டைரக்டர்கிட்ட திட்டுதான் வாங்கணும்" என்று பயந்து கொண்டே சொன்னாராம். உடனே அந்த ஸ்டெப்பை அம்பிகா இல்லாமல் கமல் மட்டுமே ஆடும்படி மாற்றி எடுத்தார்களாம்.
சிவக்குமார்: நானும், ராதாவும், ஒரே சமயத்தில் சினிமாவுக்குள் வந்தாலும்கூட, எங்களுக்குள் போட்டியோ, பொறாமையோ கிடையாது. ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசமும், அன்பும் வைத்திருந்தோம்... ஒருமுறை சிவக்குமார் சார் என்னிடம், "ராதா மிகச்சிறந்த நடிகை'' என்று சொன்னார்.. அந்த நிமிஷம் எனக்கு அப்படியொரு சந்தோஷம் ஏற்பட்டது. சிவக்குமார் சொன்னதை ராதாவிடம் சொல்லி நான் பெருமைப்பட்டேன்" என்று சிலாகித்து பேசுகிறார் அம்பிகா.
"சினிமாவுக்கு நீங்கள் வராமல் இருந்திருந்தால் என்னவாகி இருப்பீர்கள்?" என்று ஒருமுறை அம்பிகாவிடம் ஒருமுறை செய்தியாளர்கள் கேட்டிருக்கிறார்கள்..
ஆசைகள்: அதற்கு அம்பிகா, "என்னை ஐஏஎஸ் ஆக்கவேண்டும் என்று என் அப்பா ஆசைப்பட்டார்.. சட்டம் படிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருந்தது. அதனால், சினிமாவுக்கு வராமல் இருந்தால், நான் வக்கீலாகியிருப்பேன். சினிமா நடிகையானதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. மறுபிறவி என்று ஒன்று இருக்குமானால், இதே குடும்பத்தில், இதே பெற்றோருக்கு மகளாக, இதே சகோதரிகளுடன் நான் பிறக்கவேண்டும்.. இதே மாதிரி சினிமா நட்சத்திரமாக புகழ்பெறவேண்டும். இதுவே என்னுடைய ஆசை..












Click it and Unblock the Notifications