கணவரோடு புகைப்படத்தை பதிவிட்ட சிறகடிக்க ஆசை விஜயா.. உருக்கமாக வெளியிட்ட பதிவு! அந்த வார்த்தை சூப்பர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா கேரக்டரில் நடித்து வரும் நடிகை அனிலா ஸ்ரீகுமார் தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு தன்னுடைய கணவர் குறித்து நீண்ட பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
உழைப்பும் திறமையும் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். தன்னுடைய திறமையை தொடர்ந்து வெளிகாட்டி கொண்டிருக்கும் போது சரியான நேரத்தில் அது பலராலும் வியக்கப்படும். அந்த வகையில் நடிகை அகிலா ஸ்ரீகுமார் ஆரம்பத்தில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்திருந்த நிலையில் அவருக்கு மலையாளத்தில் ஒரு சில சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து தமிழிலும் நடிக்க தொடங்கினார். அதிலும் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் சீரியல் இவருக்கு ஒரு திருப்பத்தை கொடுத்தது. அதற்குப் பிறகு சின்னதம்பி சீரியலிலும் நடித்திருந்தார். ஆனால் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவாக இப்போது பலர் இவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இவர் தமிழ் சீரியல்களில் நடிக்கப் போகிறேன் என்றதும் அவருடைய உறவினர்கள் எல்லோரும் ரொம்பவும் பயமுறுத்தி இருக்கிறார்கள். தமிழ் உங்களுக்கு தெரியாதே எப்படி நீங்க நடிக்க முடியும் என்று பலர் கேட்டதாகவும், ஆனால் தமிழ் ரசிகர்கள் தனக்கு கொடுக்கும் ஆதரவை பார்க்கும் போது தனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, எனக்கு இப்போது இங்குதான் கம்ஃபர்ட் ஆக இருக்கிறது என்று பேட்டியில் அணிலா கூறியிருக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் தொடங்கிய சில மாதங்களிலேயே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுவிட்டது. டிஆர்பி யில் விஜய் டிவியில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அதனாலேயே இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள்.
சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலைக்கு மனைவியாகவும் முத்து, மனோஜ், ரவிக்கு அம்மாவாகவும் இருக்கும் விஜயா முத்து மீது மட்டும் மொத்த கோபத்தையும் காட்டுகிறார். அதோடு முத்துவை எவ்வளவுதான் அவமானப்படுத்தினாலும் முத்து தன்னுடைய அம்மாவிற்கு மரியாதையும், அம்மா மீது அளவு கடந்த அன்பையும் அடிக்கடி பொழிந்து கொண்டிருக்கிறார்.
இதனால் விஜயாவை அதிகமான ரசிகர்கள் திட்டுகிறார்கள். விஜயா சிறகடிக்க ஆசை சீரியலில் பரதநாட்டிய கலைஞராக இருக்கிறார். ஆனால் அவருடைய நிஜ வாழ்க்கையிலும் பரதநாட்டிய கலைஞர் தான். அதுபோல தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் அணிலா சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படத்தை அணிலாஸ்ரீ தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில் "பல நிச்சயம் அற்ற தன்மைகள் நிறைந்த உலகில் ஒரு விஷயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்... நான் உன்னை நேசிக்கிறேன்.. இன்று 29ஆவது ஆண்டு திருமண நாள்" என்று தன்னுடைய கணவரை டேக் செய்து இருக்கிறார். 28 வருடங்களாக எல்லா விதத்திலும் உறுதுணையாக சப்போர்ட் செய்து கொண்டிருக்கும் தன்னுடைய கணவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார். நடிகை அனிலாவின் கணவர் ஸ்ரீகுமார் அனிலாவோடு சேர்ந்து விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடி இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications