பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி ஆகும் நடிகை.. இனி கதை இதுதானா? அடுத்த பிரச்சனை தொடங்கியாச்சு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் புதியதாக ஒரு நடிகை அறிமுகமாக இருக்கிறார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவுதான் இப்போது இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இப்போது பட்டி தொட்டி எல்லாம் பேசப்படும் சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியலும் இருக்கிறது. கடத்த வார நீயா நானா எபிசோடில் கூட கோபிநாத் கொரிய மாப்பிள்ளை ஒருவரிடம் நாங்க உங்க ஊரு சீரியல் பார்க்கிறோம், நீங்க எங்க ஊரு பாக்கியலட்சுமி சீரியல் பார்க்க மாட்டீங்களா? என்று செல்லமாக சண்டை போட்டு இருந்தார். இப்படியாக பாக்கியலட்சுமி சீரியல் குறித்து இணையத்திலும் அதிகமாக பேச்சு நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் இப்போது ஈஸ்வரி தான் ராதிகாவின் கர்ப்பம் கலைந்ததற்கு காரணம் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் மயூ சொன்ன சாட்சியின் அடிப்படையில் ஈஸ்வரி நிரபராதி என்று நீதிமன்றம் ஈஸ்வரியை விடுதலை செய்திருக்கிறது. இனி மயூவிடம் ராதிகா எப்படி நடந்து கொள்ளப் போகிறார்? அதே நேரத்தில் கோபி இனி வீட்டில் என்ன பிரச்சனை செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இப்படியான நிலையில் இந்த சீரியலில் புதியதாக நடிகை ஒருவர் அறிமுகமாக இருக்கிறார். அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அது குறித்து அப்டேட் கொடுத்திருக்கிறார். அது வேறு யாரும் இல்லை நடிகையாகவும் செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வரும் அனிதா சம்பத் தான். அனிதா சம்பத் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்தாலும் அதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதும் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார்.

அதுவரைக்கும் அவருடைய நிஜ கேரக்டர் யாருக்கும் தெரியாமல் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பேசப்பட்டார். அதற்கு பிறகு திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல பல சீரியல்களிலும் ஹெஸ்ட் ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்ற நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட ஸ்டோரியில் பாக்கியலட்சுமி சீரியலில் அவர் ஹெஸ்ட் ஆக என்ட்ரி கொடுக்கப் போவது உறுதியாகி இருக்கிறது.
அதோடு பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்ததும் பாக்யா மற்றும் கோபி இருவருக்கும் இடையே புதிய சமையல் போட்டி ஒன்று நடப்பது போன்று ஷூட்டிங் புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. இதனால் ஈஸ்வரி பிரச்சனை பஞ்சாயத்து முடிப்பதும் அடுத்ததாக கோபி மற்றும் பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் சமையல் போட்டி தான் நடக்கப்போகிறது.

இதில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று அடுத்த கட்ட நகர்வு இருக்கப் போகிறது என்று தெரிகிறது. அதே நேரத்தில் கோபியாக இந்த சீரியலில் நடிக்கும் சதீஷ் தன்னுடைய instagram பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் இன்னும் 50 அல்லது 100 எபிசோடுகளுக்கு கோபியிடம் இருந்து காமெடி எதிர்பார்க்க முடியாது,
இனி சென்டிமென்ட் காட்சிகளும் அழுகாச்சி காட்சிகளும் தான் இருக்கும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு நான் வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்து மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு சீரியல் தரப்பினர் கதையில் ஏதாவது சேஞ்ச் செய்தால் கதையில் கொஞ்சம் டுவிஸ்ட் இருக்கும் என்றும் கூறி இருக்கிறார். இதனால் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications