மாலத்தீவு பிரச்சனை.. அனிதா சம்பத் போட்ட வீடியோவால் கடுப்பாகும் “இந்தியர்கள்”.. குவியும் கமெண்ட்
சென்னை: நடிகை அனிதா சம்பத் வெளியிட்ட ட்ராவல் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் திட்டி கருத்து வெளியிட்டு வருகிறார்கள். நடிகை அனிதா சம்பத் தன்னுடைய கணவரோடு சேர்ந்து மாலத்தீவு வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். இது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாக அனிதா சம்பத் தற்போது பிரபல நடிகையாகவும் இருக்கிறார். அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார். ஆரம்பத்தில் அனிதா சம்பத்துக்கு அதிகமான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனால் ஒரு சில நாட்களிலேயே அனிதா சம்பத் பேசுவதை பார்த்து அவருக்கு எதிராக பலர் வெறுப்பை கொட்டி கொண்டிருந்தனர்.

செய்தி வாசிப்பாளராக சம்பாதித்து வைத்திருந்த பெயர் அனிதா சம்பத்துக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகட்டிவ்வாக அமைந்தது. அதுபோல சீக்கிரமாகவே அந்த நிகழ்ச்சியில் இருந்து அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். அதைத் தொடர்ந்து ஜீ தமிழ், விஜய் டிவி போன்ற சீரியலில் குண சித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் அனிதா சம்பத் தன்னுடைய கணவரோடு சேர்ந்து youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

அதில் தான் செய்யும் பல செயல்களை வீடியோவாக வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதில் சமீபத்தில் அவர் தன்னுடைய புது வீட்டின் வீடியோவை வெளியிட்டு இருந்தார். அது மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்று இருந்தது. பலரும் அனிதாவிற்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர். அதைத்தொடர்ந்து சமீபத்தில் அவர் அந்தமானுக்கு சுற்றுலா போயிருந்த வீடியோ ஒன்றை தன்னுடைய youtube சேனலில் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்திய அரசுடன் மாலத்தீவு அரசு பிரச்சனையில் இருக்கிறது. சர்ச்சை பெரியதாக வெடித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் மாலத்தீவில் வாழும் இந்தியர்களை வெளியேற்ற வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கோஷமிட்டு வருகிறார்கள்.

அதோடு இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற உதவி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மாலத்தீவுக்கு இந்திய மக்கள் சுற்றுலா பயணம் செய்வதை தவிர்த்து வருகிறார்கள். இப்படியான நிலையில் அனிதா சம்பத் தன்னுடைய கணவரோடு வெளியிட்ட வீடியோவை பார்த்ததும் நெட்டிசன்கள் அனிதாவை திட்டியும், வேறு இடம் உங்களுக்கு கிடைக்கவில்லையா?, இது இந்தியாவை அவமதிக்கும் செயல் என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications