என் பொண்ணு விஜயை பாக்கணும்னு ஆசைப்பட்டா, நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்!‘பூவே உனக்காக’ அஞ்சு ஓபன்
சென்னை: 90ஸ்களில் தமிழ் சினிமாவில்ப் பிரபலமான நடிகைகளில் ஒருவரான அஞ்சு, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யுடன் தான் நடித்த அனுபவங்கள், 'பூவே உனக்காக' படத்தின் நினைவுகள் மற்றும் தன் மகள் குறித்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
யார் இந்த நடிகை அஞ்சு
நடிகை அஞ்சு மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளில் நடித்தவர். தமிழில் 'பூவே உனக்காக', 'ஒன்ஸ்மோர்' போன்ற படங்களில் விஜயுடன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். குறிப்பாக, 'பூவே உனக்காக' படத்தின் வெற்றி, இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. தற்போது திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து விலகியிருந்தாலும், சில சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளில் அவ்வப்போது தலை காட்டி வருகிறார்.

மகள் கேட்டது
அஞ்சு தனது பேட்டியில், நடிகர் விஜய் குறித்தும், தனது மகள் குறித்தும் பேசியதுதான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. "என்னுடைய மகள் இப்போ பதினொன்றாம் வகுப்பு படிச்சிட்டு இருக்காங்க. அந்தப் பொண்ணு ஒரு நாள் என்கிட்ட, 'விஜய்யைப் பார்க்கணும்' என்று கெஞ்சிக் கேட்டாங்க" என்று அஞ்சு கூறியுள்ளார். ஆனால், மகளின் கோரிக்கையைத் தாயான அஞ்சுவால் நிறைவேற்ற முடியவில்லை. "நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். ஏன்னா, இப்ப அவருடைய நிலைமை வேற மாதிரி இருக்குது. இந்த நேரத்தில் எப்படிப் பார்க்க முடியும்? அதற்கு வாய்ப்பே இல்லைன்னு சொல்லிட்டேன்" என்று தனது தற்போதையச் சூழலை விளக்கியுள்ளார்.
பூவே உனக்காக' நினைவுகள்
அஞ்சு, 'பூவே உனக்காக' வெற்றி விழா குறித்தும், அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த சங்கீதாவுடனான நட்பு குறித்தும் மனம் திறந்துப் பேசியுள்ளார். 'பூவே உனக்காக' படத்திற்குப் பிறகு, 'ஒன்ஸ்மோர்' படத்திலும் அஞ்சு விஜய்யுடன் நடித்திருந்தார். "'பூவே உனக்காக' படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டபோது எனக்கு மேடையில் பேச வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் எல்லாம் இப்போ மாதிரி எனக்கு தமிழ் பேசத் தெரியாது. அதனால் நான் மேடையில் திணறிக் கொண்டிருந்தபோது, நடிகை சங்கீதாதான் எனக்கு ஹெல்ப் பண்ணாங்க."
உண்மையான நட்பு
"சங்கீதா என்னோட நல்ல ஃப்ரெண்டா ஆகிட்டாங்க. அவங்கதான் நான் பேசியதை எல்லாம் தமிழில் மொழிபெயர்த்து மக்களுக்குச் சொன்னாங்க. அந்த நாட்களையெல்லாம் மறக்க முடியாது. இப்ப எல்லாம் நடிகைகளுக்குள் இந்த அளவிற்கு ஒற்றுமையும் நட்பும் இருக்குமா என்று சொல்ல முடியாது. ஆனால், அப்போ எங்களுக்குள் அந்த அளவிற்கு ஒற்றுமை இருந்தது" என்று அஞ்சு கூறியுள்ளார்.
விஜய்யின் வளர்ச்சி
'பூவே உனக்காக' (1996) படம் விஜய்க்கு ஒரு பெரிய திருப்புமுனையை கொடுத்த படம். அப்போது அவர், வளர்ந்து வரும் இளம் நடிகராக இருந்தார். ஆனால், இன்று அவர் இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகவும், அரசியல் களத்தில் நுழைந்தப் பிறகு அவர் அடைந்திருக்கும் உச்சமும், அஞ்சு கூறுவது போல, "விஜய் இப்போ வேற லெவல்ல இருக்காரு" என்பதை உறுதிப்படுத்துகிறது.
விஜய்யுடன் நடித்த பல நடிகைகள், அவர் எவ்வளவு எளிமையானவர், அமைதியானவர் என்றுப் புகழ்ந்துள்ளனர். நடிகை அஞ்சுவின் இந்த கூற்றும், விஜய்யின் இந்த மிகப்பெரிய வளர்ச்சி காரணமாகவே, இன்று பழக்கப்பட்டவர்கள் கூட அவரை எளிதில் அணுக முடியாத ஒரு நிலை உருவாகிவிட்டதைக் காட்டுவதாக இருக்கிறது.
-
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக!












Click it and Unblock the Notifications