காதல் என்ற பெயரில் இழந்தது.. எமோஷனலாக பேசிய அனுபமா! ரசிகர்கள் பிடித்த பாயிண்ட்
சென்னை: நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் கொடுத்த பேட்டி இப்போது சோஷியல் மீடியாவில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. காரணம் இது வெறும் பிரேக் அப் பற்றி அவர் பேசிய பேட்டி கிடையாது. ஒரு காதல் உறவு, எப்படி ஒருவரை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிவிடும் என்பது அனுபமா தனது அனுபவமாகவே சொல்லி இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு அனுபமா "என்னை மீண்டும் என்னிடமே அழைத்து வந்ததற்கு நன்றி" என்ற அர்த்தத்தில் ஒரு பதிவை போட்டு இருந்தார். அதை பார்த்த பலரும் இவருக்கும் துருவ் விக்ரமுக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதா? என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்தார்கள். இருவரும் காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை என்றாலும் பைசன் படத்திற்கு பிறகு இருவரையும் சுற்றி காதல் செய்திகள் வந்து கொண்டே இருந்தது. அப்போது அவர்கள் இருவரும் அதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை.

நடிகை அனுபமா பேட்டி
இந்த நிலையில் அனுபமா மலையாள சேனல் ஒன்றில் பேசுகையில், நான் அனுபவித்தது சாதாரணமான காதல் பிரச்சனை கிடையாது. அது நாஸ்ட்ரிக் அப்யூஸ் என்று கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் எல்லாமே நல்லபடியாக தான் தெரியும். நம்முடைய கஷ்டங்களை கேட்டு எனக்கும் இதே மாதிரி நடந்திருக்கிறது என்று சொல்வார்கள். நம்மை மற்றவர்கள் புரிந்து கொள்ளாத அளவிற்கு அவர்கள் புரிந்து கொள்வது போல இருக்கும். அதனால் நாமும் முழுசாக அவர்களை நம்ப ஆரம்பித்து விடுவோம்.
காதல் பிரச்சனை
அதற்கு பிறகு தான் சின்ன சின்ன மாற்றங்கள் ஆரம்பிக்கும். இந்த உடை உனக்கு நல்லா இருக்கு என்று ஆரம்பிப்பது.. ஒரு கட்டத்தில் இந்த உடையை போடாதே என்று மாறும். சமூக வலைத்தளத்தில் ஒரு போஸ்ட் போட்டால் இந்த கமெண்ட்ஸ் எல்லாம் பாரு என்று சொல்லி அதை நீக்க வைப்பார்கள். அடுத்த கட்டத்தில் எதை போடுவது என்று கூட அவரிடம் கேட்கும் நிலைமைக்கு நாம் வந்து விடுவோம் என்று அனுபமா சொன்னது தான் இப்போது பல பெண்களை யோசிக்க வைத்திருக்கிறதாம்.
பெண்களின் கருத்து
ஒரு கட்டத்தில் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் நண்பர்கள், குடும்பம், விருப்பங்கள் என ஒவ்வொன்றாக நம்மை விட்டு விலக ஆரம்பிக்கும். ஆனால் அது நடக்கும்போது கூட நமக்கே தெரியாது. ஒரு மரத்தோட கிளைகளை ஒவ்வொன்றாக வெட்டுற மாதிரி நம்முடைய சுய விருப்பங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிடுவாங்க என்று அனுபமா கொடுத்த விளக்கம் பலரையும் அதிர வைத்திருக்கிறது.
அவர் இப்படி பேசியதும் பலர் தங்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதில் பெண்கள் மட்டுமல்லாமல் சில ஆண்களும் தங்களுடைய காதல் வாழ்க்கையில் இது போன்று தான் நடந்தது, நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பால் நமக்கே தெரியாமல் அவர்களின் அடிமையாக மாறி இருக்கிறோம் என்று சொல்லி வருகிறார்கள்.

நடிகை அனுபமா அட்வைஸ்
அதுபோல அனுபமா பேட்டியில், ஒரு நாள் அதிகமாக காதலிப்பது போல இருப்பார்கள். மறுநாள் நம்மை கண்டு கொள்ளவே மாட்டார்கள். அதன் பிறகு மீண்டும் வந்து இனிமேல் இப்படி நடக்காது என்னை மன்னிச்சிடு என்று அழுவார்கள். நாமும் அந்த காதலை நம்பி மீண்டும் அவர்களிடம் செல்வோம். மீண்டும் அதே விஷயம் நடக்கும்... இதுதான் லவ் பூமிங் மற்றும் கண்ட்ரோல் என்று அனுபமா உருக்கமாக பேசி இருக்கிறார்.
இதைத்தான் பலரும் தங்களுடைய வாழ்க்கையுடன் கனெக்ட் பண்ணி இந்த வீடியோக்களை ரீ ஷேர் செய்து வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் பேசிய பேட்டி எவ்வளவு வைரல் ஆனதோ அதேபோல இப்போது அனுபமா பேசிய பேட்டியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அந்த பேட்டியில் அனுபமா எந்த இடத்திலும் தான் யாரை காதலித்தேன், யாருடன் பிரேக்கப் ஆனது என்பது பற்றி சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
