சூட்டிங்ல சிரஞ்சீவி என் இடுப்பில் கை வச்சிட்டாரு.. எங்க அம்மா உடனே செய்த செயல்.. நடிகை அனுராதா ஓபன்
சென்னை: நடிகை அனுராதா தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் கதாநாயகியாவும், கவர்ச்சி டான்ஸ்ஸராகவும் நடித்திருக்கிறார். அந்த நிலையில் தான் ஒரு திரைப்பட பாடலுக்கு நடிகர் சிரஞ்சீவியோடு டான்ஸ் ஆடும் போது அவர் தன்னுடைய இடுப்பில் கை வைத்தது பற்றி பல வருடங்களுக்கு பிறகு இப்போது அனுராதா சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
பொதுவாக பல நடிகைகள் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் அங்கு தங்களுக்கு மார்க்கெட் குறைய தொடங்கியதும் சீரியல் நோக்கி அடியெடுத்து வைத்துவிடுவார்கள். அந்த மாதிரி தான் நடிகை அனுராதா ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்து பிறகு குணச்சித்திர வேடங்களிலும் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இப்போது சீரியல்களில் பாட்டியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் அனுராதாவின் நிஜப் பெயர் சுலோக்சனா தான். இவர் 1980ல் முதல் 90 வரை அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் 13 வயதிலேயே சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். அந்த நேரத்திலேயே இவர் வயதை மீறிய உயரத்தை பெற்று இருந்ததால் இவருக்கு அந்த நேரத்தில் நாயகியாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் முப்பதுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகி ஆக நடித்திருந்தாலும் அது பெரிய அளவில் அவருக்கு பிரபலத்தை கொடுக்காததால் கவர்ச்சி பாடல்களுக்கு டான்ஸ் ஆட தொடங்கி இருக்கிறார்.
அதோடு 700க்கும் மேற்பட்ட படங்களிலும் அனுராதா நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் இவர் அந்த நேரத்திலேயே தற்காப்பு பயிற்சிகளையும் பெற்றிருக்கிறார். தன்னுடைய சண்டை காட்சிகளில் வேறு எந்த நடிகரையும் டூப்புக்கு நடிக்க வைக்காமல் இவரே அதில் நடித்து விடுவாராம். அதோடு அந்த காலத்திலேயே ஜாவா, எஃபீல்டு புல்லட் போன்ற பைக்குகள் எல்லாம் சர்வ சாதாரணமாக ஓட்டி விடுவாராம்.
அதுபோல அனுராதாவின் அப்பா டான்ஸ் மாஸ்டர் கிருஷ்ணகுமார் தான். அது போல அவருடைய அம்மா சரோஜா சிகை அலங்கார நிபுணராக இருந்திருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய திரைப்பட அனுபவங்கள் குறித்து அனுராதா தற்போது ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் பேசும்போது நான் ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் எனக்கு கவர்ச்சியான டான்ஸ் மூலமாக தான் பிரபலம் கிடைத்தது.
அந்த நேரத்தில் நடந்த அனுபவங்களும் என்னால் மறக்க முடியாது. அதாவது ஒரு படத்தில் நான் சிரஞ்சீவியுடன் டான்ஸ் ஆடுவது போல இருந்தது. சிரஞ்சீவி உடன் டான்ஸ் ஆடும் போது அவருடைய கை தெரியாமல் என்னுடைய இடுப்புக்கு கீழ் பகுதியில் வந்துவிட்டது. அப்போது போட்டோ எடுக்க போகும் காட்சி என்று சொல்லப்பட்டது, என்னுடைய அம்மா சிரஞ்சீவியின் கையை பார்த்ததும் என்னுடைய பக்கத்தில் வந்து என்னுடைய உடையை சரி பண்ணுவது போலவே சிரஞ்சீவியின் கைகளை எடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.
அதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து நான் இன்னொரு படத்தில் சிரஞ்சீவியோடு நடிக்கப் போயிருந்தேன். அப்போது ஒரு பாடலுக்கு எனக்கு முட்டி வரைக்கும் ஷார்ட்ஸ் போடுவதற்கு சொல்லி இருந்தார்கள் நான் அந்த பாடலுக்கு இவ்வளவு போட்டால் செட்டாகாது அதனால் இன்னும் கொஞ்சம் கட் பண்ணி குட்டையாக தைத்து தாருங்கள் என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது சிரஞ்சீவி என்னுடைய அம்மாவை கூப்பிட்டு உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? உங்க பொண்ணோடு நான் இன்னொரு பாட்டில் நடிக்கும் போது என்னுடைய கை தெரியாமல் அனுராதாவின் இடுப்புக்கு கீழ் பகுதியில் பட்டுவிட்டது, உடனே நீங்கள் அந்த கையை எடுத்துவிட்டுட்டு போனீங்க.
ஆனா இப்போ உங்க பொண்ணு இவ்வளவு குட்டியான டிரஸ் தான் போடுவேன் என்று அடம் பிடிக்குது என்று சொன்னார். எங்க அம்மாவுக்கு சில வருடங்களுக்கு முன்பு நடந்தது மறந்து போய்விட்டது. ஆனால் அதை சிரஞ்சீவி மறக்கவில்லை. ஆனால் எனக்கு இந்த சம்பவம் நடந்ததே தெரியாது. அம்மா ஏதோ டிரஸ் அட்ஜஸ்ட் பண்றாங்கன்னு தான் நான் அந்த நேரத்தில் நினைத்திருந்தேன் என்று அந்த பேட்டியில் அனுராதா பேசி இருக்கிறார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications