அப்பா வயசு டைரக்டர் தப்பா நடந்து.. நடிகை தற்கொலை முயற்சி.. அஸ்வினி துணிச்சல் பேச்சு.. யாரந்த பிரபலம்
சென்னை: தன்னிடம் அப்பா வயதுள்ள டைரக்டர் தவறாக நடந்து கொண்டதாகவும், அந்த டைரக்டரை அதற்கு பிறகு பார்க்கவேயில்லை, இனிமேல் பார்த்தாலும் அவரை மன்னிக்கும் பக்குவம் தனக்கு இருப்பதாகவும் நடிகை அஸ்வினி தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை அஸ்வினி சமீபத்தில் ஒரு சேனலுக்கு தந்திருந்த பேட்டியில், "அவர் ஒரு பெரிய டைரக்டர்.. படம் விஷயமாக டிஸ்கஸ் செய்ய வேண்டும் என்று என்னை அவரது ஆபீசுக்கு வர சொல்லி இருந்தார்.. நானும் கிளம்பி போனேன்..

அப்பவே மோசமான சூழ்நிலை இருந்ததா
மாடியில் டைரக்டர் இருப்பதாக சொல்லவும், மாடிக்கு சென்றேன். ஆனால் அங்கே யாருமே இல்லை.. "உள்ளே வா" என்று மட்டும் ஒரு குரல் கேட்டது.. அப்போது அந்த டைரக்டர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்" என்று வருத்தத்துடன் கூறியிருந்தார்.
இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணனின் Touring Talkies சேனலுக்கு, பிரபல நடிகை அஸ்வினி பேட்டி தந்துள்ளார்.. அப்போது, சித்ரா லட்சுமணன் அவரிடம் "அப்பா வயதுடைய இயக்குனர் உங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறீர்கள்? அப்போதே அதுபோன்ற மோசமான சூழ்நிலை இருந்ததா? என்று கேள்வி எழுப்பினார்.
அப்பா வயதான டைரக்டர்
அதற்கு அஸ்வினி, "ஆமாம், இருந்தது.. அவர் பிரபல டைரக்டர்தான்.. எப்போதுமே அம்மா என்னுடனேயே ஷூட்டிங் வருவார்.. அதனால், என்னால் அதுபோன்ற சூழ்நிலைகள் பலவற்றை தவிர்க்க முடிந்தது.. ஆனால், அன்றைய தினம் என்னுடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை.. அதனால் அவரால் என்னுடன் வரமுடியாத நிலைமை. எனவே, நான் தனியாக ஷூட்டிங்கில் இருக்க வேண்டியதாயிற்று.
அப்போது அப்பா ஸ்தானத்தில் இருக்கக்கூடிய அந்த நபர் என்னிடம் தப்பாக நடந்து கொள்ள முயற்சித்தார்.. அந்த வயசுக்கு அதற்கான புரிதல்கூட எனக்கு இல்லை.. வீட்டுக்கு வந்ததுமே, ஏன் டல்லா இருக்கே? என்று என்னுடைய அம்மா கேட்டார். ஆனால் எனக்கு சொல்ல தெரியல. நான்தான் பெரிய தப்பு செய்துவிட்டதாக தோன்றியது. காரணம், அந்த டைரக்டரை அப்படி தவறாக கேட்கும் அளவுக்கு நான்தான் பேச அனுமதித்திருக்கிறேன்.
மருத்துவமனையில் அனுமதி
அந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீள முடியாமல், தூக்க மாத்திரை சாப்பிட்டுட்டேன்.. அதுக்கப்புறம் என்னை மருத்துவமனையில் அனுமதிச்சு, என் உயிரை காப்பாற்றினார்கள்.. "இது உன்னுடைய தப்பு இல்லை, நீ அப்படி நினைக்காதே" என்றெல்லாம் என்னுடைய அம்மா எனக்கு நிறைய புத்தி சொன்னார்.. அதுக்கப்புறம்தான், அந்த டைரக்டரை நான் பார்க்கவேயில்லை..
ஒருவேளை இன்னைக்கு அவரை நேரில் சந்தித்தால், அவரை எதிர்கொள்ளக்கூடிய நம்பிக்கை இன்று எனக்கு இருக்கிறது.. "வணக்கம் சார், எப்படி இருக்கீங்க?" என்று என்னால் கேட்க முடியும். வெறுப்பை நான் தக்கவைத்து கொள்ளவில்லை.. அப்படி வெறுப்பை நான் வைத்து கொண்டால், அது என்னைதான் பாதிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications