ஐயோ! எப்படி இருந்த நடிகை பானுப்பிரியாவா இது? தளர்ந்த நடை..! எப்படி மாறிவிட்டார் பாருங்க
சென்னை: 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை பானுப்பிரியா சமீபத்தில் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.
இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து இப்போது அவர் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது .

அதில் உடல் தளர்ந்து, அமைதியின் உருவமாக மாறி இருக்கும் பானுப்பிரியாவை பார்த்த ரசிகர்கள் பீல் பண்ணி வருகிறார்கள். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முதுமை என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். அது நமக்கு பழக்கப்பட்டவர்களுக்கு வரும்போதுதான் எப்படி இருந்த அவர் இப்படி மாறிவிட்டாரே? என்று அனைவருக்கும் என்ன தோன்றும். அந்த மாதிரி தான் தற்போது நடிகை பானுப்ரியாவை பார்த்த பல ரசிகர்கள் பீல் பண்ணி வருகிறார்கள்.
1967இல் ஆந்திராவில் பிறந்த நடிகை பானுப்ரியா பிறகு குடும்பத்தோடு சென்னையில் குடி பெயர்ந்து இருந்தார். அதற்கு பிறகு 1980களில் தொடங்கி 90களில் முன்னணி நடிகையாக பல வலம் வந்தவர்தான். அதனாலே 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகைகளில் பானுப்பிரியாவும் ஒருவர். அவருடைய அழகான கண்கள் மற்றும் நடன அசைவுகள் பலருடைய மனதையும் கவர்ந்தது.

கடைசியாக பானுப்பிரியா கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்திலும் அசோக் செல்வம் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவருடைய கணவர் இறப்பிற்கு பிறகு தனக்கு நினைவாற்றல் குறைந்து விட்டதாக பேட்டி ஒன்றில் பேசி இருந்தார்.
நடிகை பானுப்பிரியா நடித்த திரைப்படங்களில் அவருடைய எவர்கிரீன் டான்ஸ் மற்றும் அல்லாமல் பாடல்களும் கூட பலருடைய மனதைக் கவர்ந்தது. அதிலும் மாலையில் யாரோ மனதோடு பேச என்ற பாடல், செல்லமே திரைப்படத்தில் இவருடைய க்யூட்டான டான்ஸில் வந்த "கும்மியடி பெண்ணே கும்மியடி" என்ற பாடல் இப்போதும் பலருடைய ஃபேவரைட் தான்.

இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு நடிகை பானுப்ரியா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் அமைதியின் சொரூபமாக மெதுவாக நடந்து வருகிறார். அங்கு இருக்கும் பத்திரிக்கையாளர்கள் முன்பு போட்டோ எடுத்த பிறகு தனியாக சோகமாக அமர்ந்திருக்கிறார். இப்படியாக அவர் அந்த வீடியோவில் இருக்கும் நிலையில் இதை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு க்யூட்டாக சிரித்தபடியே பேசிக் கொண்டிருக்கும் பானுப்பிரியாவா? இப்படி ஆகிவிட்டார் என்று ஃபீல் பண்ணி வருகிறார்கள்.
நடிகை பானுப்ரியாவிற்கு அபிநயா என்ற ஒரு மகள் இருக்கிறார். அவர் லண்டனில் படித்து வருகிறார். அதே நேரத்தில் அவருடைய சகோதரி நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளிவந்த "எங்க ஊரு பாட்டுக்காரன்" திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை சாந்திபிரியா தான். இப்போது நடிகை பானுப்பிரியா தன்னுடைய வீட்டில் தனியாகத்தான் வசித்து வருகிறார். இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு அவருடைய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications