சொத்து போயிருச்சு.. பானுப்ரியாவுக்கு மறதியும் வந்துருச்சு.. ஆமா, சாந்தி ப்ரியா மொட்டை ஏன்: பிரபலம்
சென்னை: நடிகை பானுப்ரியாவின் தங்கையும், நடிகையுமான நிஷாந்தி என்கிற சாந்தி ப்ரியா, தற்போது மொட்டை அடித்துள்ளார்... இந்த போட்டோ இணையத்தில் வைரலாகியும் வருகிறது.. இவர் மொட்டை அடித்ததற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள. ஆனால், இவர் ஏன் திடீரென மொட்டை அடித்தார் என்று பலரும் பல சந்தேகங்களை எழுப்பி கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.
கங்கை அமரன் இயக்கிய எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சாந்தி பிரியா. 80களில் தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டிருந்தவர், இப்போது மீண்டும் ரீஎன்ட்ரி தந்துள்ளார்.

இப்போது திடீரென மொட்டை அடித்துள்ளார் சாந்தி பிரியா.. இதுகுறித்து அவர் சொல்லும்போது, "மொட்டை அடித்து கொண்டால், மனநிலை பிரச்னை என்பார்கள், மொட்டை அடித்தால் கேன்சரா என்கிறார்கள். எந்த நோயும் எனக்கு இல்லை. நான் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொட்டை அடித்து கொண்டதாக சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். நான் யாருக்கும் இதற்கான விளக்கம் அளிக்கவில்லை. அவரவர் விருப்பத்திற்கு என்ன வேண்டும் என்றாலும் பேசிக்கொள்ளட்டும்
மொட்டை அடிப்பது
ஹீரோயின்கள் நீண்ட தலைமுடியுடன் அழகாக இருக்க வேண்டும் என திரையுலகில் எதிர்பார்ப்பார்கள். நாம் மொட்டை அடித்தால் நம்மை தேடி வரும் வாய்ப்புகள் பாதிக்குமோ என வியந்தேன். மக்கள் என்னை வித்தியாசமாக பார்ப்பார்களா என தோன்றியது. இப்படியே பயத்திலேயே இருக்க வேண்டுமா என தைரியமாக மொட்டை அடித்தேன்.. " என்றெல்லாம் கூறியிருந்தார்.
இந்நிலையில், Cine Kazhugu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "பானுப்பிரியா கணவர் இறந்ததுமே சைலண்ட் ஆகிட்டாங்க.. ஒரு குழந்தை இருக்கிறது.. சினிமாவில் ஒருகாலத்தில் பரபரப்பாக இருந்தவர் பானுப்ரியா.. தினமும் ஷூட்டிங், டிவி ஷூட்டிங் என்று பரபரப்பாக இருந்துவிட்டு, கணவர் இறப்புக்கு பிறகு, வாழ்க்கையே வெற்றிடமாக போய்விட்டது.
பத்மினி பானுப்ரியா
நடிகை பத்மினியும், ஒருநாளைக்கு 8 படங்களுக்கு மேல நடித்து கொண்டிருந்தவர். திருமணத்துக்கு பிறகு, அமெரிக்காவில் தனிமையில் இருந்தபோது, நாட்டியப்பள்ளி தொடங்கி நடத்தினார்.. அங்குள்ள பல குழந்தைகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்தார்.. ஆனால், பானுப்ரியா அப்படி வேறு எந்த பக்கமும் தன்னுடைய கவனத்தை செலுத்தவில்லை. வெற்றிடமான வாழ்க்கையில், ஒரே இடத்தில் தனிமையில் சிக்கிக்கொண்டார். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளக்கூட யாருமில்லை.
நினைவுகளும் தப்ப ஆரம்பித்துவிட்டது.. ஒருகாலத்தில் சைதை தமிழரசி என்ற கேரக்டரில் ,அசத்தலாக நடித்திருப்பார். இப்போது தன்னுடைய பெண் குழந்தையுடன் நேரத்தை செலவிடுகிறார், ஆனால், பழையபடி பானுப்ரியா இல்லை.
கணவருக்காக வாழ நினைக்கிறார்
சாந்தி பிரியாவை பொறுத்தவரை, அவரது கணவர் இறந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. 2 பிள்ளைகள் இருக்கிறார்கள்., துணையின்றி இருப்பதால், தன்னிடம் ஆண்கள் நெருங்காமலும், திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தாமலும் இருப்பார்கள் என்பதற்காக மொட்டை அடித்துள்ளார்..
தன்னுடைய கணவருக்காக, குழந்தைகளுக்காக வாழ ஆசைப்படுவதாகவும், தன்னை யாரும் மாற்றிவிடக்கூடாது, மீண்டும் சினிமாவுக்கு வந்துவிடக்கூடாது என்றெல்லாம் நினைக்கிறார்..
பாதுகாப்பு அவசியம்
திரைக்கு பின்னாடி எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஆண் துணை இல்லாத நடிகைகளுக்கு சினிமாவில் பாதுகாப்பு இல்லை.. இப்போதுள்ள அவரது சூழல், வயது, குடும்பம் போன்றவற்றை பார்க்காமல், என்றைக்கோ பார்த்த சாந்தி பிரியாவைதான் பலரும் தங்களது மனதில் நினைத்திருப்பார்கள். அதற்கேற்றவாறு, சாந்தி பிரியா ஒல்லியாக, அழகாக இருக்கிறார். தேவையில்லாத தொல்லைகளிலிருந்துவிடுபட நினைக்கிறார். தன்னுடைய குடும்பம், பிள்ளைகளுக்காக வாழ நினைக்கிறார.
பானுப்பிரியா சொத்து
BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த பத்திரிகையாளர் பாண்டியன், "பொருளாதாரத்தை கட்டமைக்கக்கூடிய எந்த வழியும் பெரும்பாலான நடிகைகளுக்கு தெரிவதில்லை. அதிலும், பிஸியாக நடித்து கொண்டிருக்கும் நேரத்தில் தங்களுக்கு எவ்வளவு பணம் வருகிறது? எவ்வளவு செலவாகிறது? என்பதை தெரிந்து வைத்து கொள்ளவில்லை.
பானுப்பிரியாவின் தம்பி அவரது முழு சொத்தையும் அனுபவித்து கொண்டார்.. கடைசியில் அனைத்து சொத்தையும் இழந்து, ஏவிஎம் ஸ்டுடியோவின் ஒரு அறையில் பானுப்பிரியா தங்கியிருந்ததாக கேள்விப்பட்டேன். அப்படியானால் பானுப்பிரியாவுக்கு அந்த நேரத்தில், எந்த அளவுக்கு மன உளைச்சல் இருந்திருக்கும்? இத்தனைக்கும் ஒருகாலத்தில் தமிழகத்தின் கனவுக்கன்னியாக திகழந்தவர்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications