நடிகை பாவனாவின் கணவர் இந்த பிரபலம் தானா? திடீரென்று புகைப்படம் வெளியிட்டு உருக்கமான பதிவு
சென்னை: 90 கிட்ஸ்களின் பேவரைட் நடிகைகளில் ஒருவராக இருக்கும் பாவனா தன்னுடைய கணவனோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பாவனா தன்னுடைய கணவரோடு ஆறாவது திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்.
இப்போது அதிகமாக தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருக்கும் பாவனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஒரு சில நடிகைகள் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்று ரசிகர்களின் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுகிறார்கள். அந்த வரிசையில் ஒருவர்தான் பாவனா. பாவனா 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகிகளில் ஒருவர். சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தில் மூலமாக தமிழில் அறிமுகமாகி அதற்குப் பிறகு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர் போன்ற பல திரைப்படங்களிலும் பாவனா நடித்திருக்கிறார்.

அதுவும் 90ஸ் கிட்ஸ்களின் காலகட்டத்தில் காலேஜ் கிங் சைஸ் நோட்டில் கூட பாவனாவின் புகைப்படம் அதிகமாக இடம்பிடித்து இருக்கும். தீபாவளி திரைப்படத்தில் பாவனாவின் க்யூட்டான போஸ்கள் தான் அந்த நோட்டு புத்தகத்தின் அட்டையில் அதிகமாக இருக்கும். அதிலும் ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாவனாவிற்கு பெண் ரசிகர்களும் அதிகமாக இருந்தனர். தீபாவளி திரைப்படத்தில் இவருடைய க்யூட்டான நடிப்பு பலரையும் கவர்ந்திருந்தது.
அதற்குப் பிறகு ஜெயம் கொண்டான், அசல் போன்ற பல சில திரைப்படங்களில் பாவனா நடித்திருந்தார். ஆனால் கடைசியாக அசல் திரைப்படத்திற்கு பிறகு பாவனா தமிழில் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் தமிழ் திரைப்படங்களை தவிர மற்ற மொழிகளில் இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் 2018 ஆம் ஆண்டு நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் பிசியாக பலமொழிகளில் நடித்துவரும் பாவனா நேற்று தன்னுடைய ஆறாவது திருமண நாளை வெகு விமர்சையாக கொண்டாடி இருக்கிறார். தன்னுடைய திருமண நாளன்று தன்னுடைய திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு தன்னுடைய கணவருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். இந்த பதிவு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications