தமிழ் சீரியல், சினிமாவை விட்டு விலகிய நடிகை புவனேஸ்வரி.. அதற்குக் காரணமே "அந்த நபர்கள்” தானாம்
பல வருடங்களாக தமிழ் சினிமா, சீரியலை விட்டு விலகி இருப்பதற்கு காரணம் சில அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள், சினிமா துறையினர் தான் என்று நடிகை புவனேஸ்வரி கூறியிருக்கிறார்.
சென்னை: சீரியல்களில் அறிமுகமாகி திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை புவனேஸ்வரி பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பல வருடங்களாக தமிழ் சினிமாவை விட்டு இவர் விலகி இருப்பதற்கான காரணத்தை பற்றி அதில் விளக்கி இருக்கிறார்.
தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல பிரச்சனைகளும் அதற்குப் பிறகு தற்போதைய நிலையை பற்றியும் நடிகை புவனேஸ்வரி பேசியிருக்கிறார்.

ஒரு சிலருக்கு தான் இந்த வாய்ப்பு
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் ஜொலித்த நடிகர் நடிகைகள் அதிகமானோர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் நடிகை புவனேஸ்வரி. இவர் ஆரம்பத்தில் விளம்பர மாடலாக இருந்து பின்பு சீரியலில் நடிக்க தொடங்கி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து இருக்கிறது. சீரியலில் இவருக்கு பெரிய அளவில் பிரச்சனை இல்லாமல் வாய்ப்பு கிடைத்து விட்டாலும் திரைப்படத்தில் இவருடைய திறமையை நிரூபிப்பதற்கு ஒரு சில வாய்ப்புகள் தான் கிடைத்திருக்கிறது.

பாய்ஸ் திரைப்பட அனுபவம்
நடிகை புவனேஸ்வரி முதல் முதலாக 2015 ஆம் ஆண்டு பாசமலர் என்கிற சீரியலில் சன் டிவியில் நடித்து வந்திருக்கிறார். அதற்கு பிறகு சந்திரலேகா, ஒரு கை ஓசை, ராஜராஜேஸ்வரி, தெக்கத்தி பொண்ணு, சித்தி போன்ற பல சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு தான் இவருக்கு பாய்ஸ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பாய்ஸ் திரைப்படத்தில் ஒரு விபச்சார பெண்ணாக இவர் நடித்திருப்பார். அந்த கேரக்டரில் இவர் நடிக்கும் போது முதலில் ரொம்பவே யோசித்தாராம். இது முதல் முதலாக நடிக்கும் திரைப்படமே நமக்கு இந்த மாதிரி கேரக்டராக இருக்கிறதே என்று இவர் நினைத்தாராம். அப்போது இயக்குனர் சங்கர் தான். இந்த திரைப்படத்தில் நீ நம்பி நடிக்கலாம் நான்கு ஆண்களோடு நீ நடிச்சாலும் உன்னுடைய உடம்பில் அவர்களுடைய விரல் நுனி கூட படாது என்று கூறியிருக்கிறார்.

பிரச்சனைகள்
ஒரு பெரிய இயக்குனரின் வார்த்தையை எப்படி மறுப்பது என்று தான் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு சம்மதித்தாராம். அதுமட்டுமல்லாமல் நான் சினிமாவுக்கு விருப்பப்பட்டு வரவில்லை என்னுடைய குடும்பத்திற்கும் சினிமாவில் பின்புறம் கிடையாது. எல்லோரும் சினிமாவிற்கு வந்த பிறகு சீரியலுக்கு வருவார்கள் ஆனால் நான் சீரியலுக்கு வந்த பிறகுதான் சினிமாவில் நுழைந்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். சீரியலில் இணைந்த பிறகு எனக்கு பல்வேறு பிரச்சனைகள் வந்தது என்று கூறி இருக்கிறார். ஒரு பெண்ணிற்கு சினிமாவில் என்னென்ன பிரச்சனைகள் வருமோ அத்தனை பிரச்சனைகளும் எனக்கும் வந்தது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

சர்ச்சைகளுக்கு காரணம்
அதுமட்டுமல்லாமல் தான் எதிர்கொண்ட பிரச்சனைகள், வழக்குகள் குறித்து பேசி இருக்கிறார். நான் பொதுவாக யாரைப் பற்றியும் தப்பாக பேச மாட்டேன். அது என் இயல்பு. யாரையும் தப்பாக பேச எந்த உரிமையும் கிடையாது. ஆனால் நான் சிலரை தவறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகார் தான் மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் பேசாததை, சொல்லாததை சொன்னதாக சொல்கிறார்களே என்பதுதான் அது என்று கூறியிருக்கிறார் .அது மட்டும் இல்லாமல் என்னை சுற்றி உருவான சர்ச்சைகளுக்கு சில அதிகாரிகள், சில அரசியல்வாதிகள், சில சினிமா துறையினர் காரணமாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் நடிகை புவனேஸ்வரி 2009இல் விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட தகவல்கள் அந்த நேரத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications