எல்லோரையும் சிரிக்க வச்சேன், இப்போ அழுகிறேன்! சாப்பிட வழி இல்ல.. அந்த நடிகரும் இப்படி! - பிந்து கோஷ்
சென்னை: 80ஸ் காலகட்டத்தில் அதிகமான திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வந்த நடிகை பிந்து கோஷ் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். அதிலும் தனக்கு உடலில் பல பிரச்சினைகள் இருக்கிறது உதவுவதற்கு யாரும் இல்லாமல் தான் தனியாக கஷ்டப்படுவதாகவும் கண்கலங்க பேசி இருக்கிறார். ஒருசில நடிகர்களிடம் ஃபோன் செய்து உதவி கேட்டாலும் அவர்கள் உதவவில்லை என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.
சினிமாவில் ஒரு சில நடிகைகள் நடிகர்களை பார்த்தாலே சிரிப்பு வரும் அதுபோல பலரையும் மனம் விட்டு சிரிக்க வைத்த நடிகைகளில் ஒருவர்தான் பிந்து கோஷ் அவருடைய உடல் எடை அவருடைய நடிப்புக்கு பிளஸ் ஆக அமைந்தது. குண்டான உடல் தேகத்தில் இருந்தாலும் அதையும் தனக்கு பிளஸ் ஆக வைத்து பிந்துகோஷ் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கமல் படத்தில் அறிமுகம்
அதிலும் நடிகர் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் இடம்பெற்ற எல்லோரும் நலம் வாழ என்ற பாடலில் குழுவில் டான்ஸ் ஆடும் ஒருவராக சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதற்கு பிறகு கோழி கூவுது, கௌரி கல்யாணம், சூரக்கோட்டை சிங்கக்குட்டி, கொம்பேறி மூக்கன், விடுதலை, மங்கம்மாள் சபதம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பலரையும் சிரிக்க வைத்திருக்கிறார்.
ஆளே அடையாளம் தெரியல
ஆனால் இப்போது அவர் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை குறைந்து உடலில் பல பிரச்சனைகளோடு தவித்துக் கொண்டிருக்கிறார். அவர் கலாட்டா youtube சேனலுக்கு கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசுகையில், நான் நிறைய பேரை சிரிக்க வச்சிருக்கேன். நிறைய சினிமா நடிகர்களோடு டான்ஸ் ஆடி இருக்கிறேன்.அவங்க எல்லோரும் சூட்டிங் ஸ்பாட்டில் நான் இருந்தால் சிரிச்சிட்டே இருப்பாங்க.
பிந்து கோஷின் வயது
நான் கிட்டத்தட்ட 70 வருஷமா சினிமாவில் இருந்திருக்கிறேன். எனக்கு இப்போ 76 வயசாகுது. எனக்கு ஆரம்பத்தில் சின்ன சின்னதாக பிரச்சனை வர தொடங்கியது. இப்போ உடம்பு முழுக்க பிரச்சனை வந்துவிட்டது. முதலில் நான் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணினது தான் தப்பு என்று நினைக்கிறேன். வயிறு பெரியதாக இருக்கிறது என்று அதற்காக சர்ஜரி செய்தேன். அப்போ 13 கிலோ சதையை எடுத்தேன்.

பிளாஸ்டிக் சர்ஜரி
அதற்கு பிறகு கர்ப்பப்பை பிரச்சனை வந்ததால் அதற்காகவும் ஒரு ஆபரேஷன் செய்தேன். அந்த நேரத்தில் எனக்கு சென்னையில் வீடு இருந்தது தூங்காதே தம்பி தூங்காதே பட சூட்டிங் நடைபெற்றது. அப்போது தான் எனக்கு ஆபரேஷன் நடந்தது. ஆபரேஷனுக்காக ரெண்டு லட்சம், மூணு லட்சம் பணம் செலவானதும் சென்னையில் இருந்த வீட்டை விற்று தான் பணத்தை கொடுத்தேன்.
நடிகர் சங்கம் உதவி கிடைக்கல
எனக்கு இரண்டு பசங்க இருக்காங்க பெரிய பையன் நான் வேண்டாம் என்று ஹைதராபாத்துக்கு போயிட்டான். சின்ன பையன் தான் அவனுடைய வருமானத்தில் என்னை பார்த்துக்கொண்டு வருகிறான். நான் ஆரம்பத்தில் இருந்த வீடு ஒன்றரை கிரவுண்டில் இருந்தது. இப்போ வீட்டில் எந்த பொருள் ரிப்பேர் ஆனாலும் வந்து பார்க்க ஆளில்லை. நடிகர் சங்கத்தில் இருந்து உதவி கிடைத்ததா என்று எல்லோரும் கேட்கிறார்கள் எனக்கு இப்போது அறக்கட்டளை ஒன்றிலிருந்து தான் உதவி வந்து கொண்டிருக்கிறது வேறு எதுவும் வரவில்லை.
குடியால் அழிந்த குடும்பம்
நான் பல வருடங்களாக சினிமாவில் வேலை பார்த்தாலும் என்னுடைய கணவர் குடிகாரர் அவர் குடிச்சு குடிச்சி நான் சம்பாதிச்ச பணத்தை எல்லாம் செலவு பண்ணிட்டார். கமல்ஹாசனிடம் உதவி கேட்டு போன் பண்ணுனேன். அவர் பதில் சொல்லல. அடுத்து பிரபு, சத்யராஜ் என்று பலருக்கும் போன் செய்தேன் யாருமே எனக்கு உதவி செய்யல என்று கதறி அழுதபடியே அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

மாதச் செலவு
அதோடு தனக்கு மருத்துவ செலவுக்கு மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாய் செலவாகிறது. அதுபோல வீட்டு வாடகை 10,000 வருகிறது. அதனால் பல நேரங்களில் சாப்பிடுவதற்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படுகிறேன் என்று பிந்து கோஷ் உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications