வாழ்க்கை துணை தப்பா இருந்தா அவ்ளோ தான்.. ஜெயம் ரவி ஜென்டில்மேன்.. நடிகை பூமிகா பளிச்
சென்னை: நடிகை பூமிகா பிரதர் திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ஜெயம் ரவி பற்றியும் தன்னுடைய கணவர் பற்றியும் சில விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சமீபகாலமாக ஒரு நடிகரோ அல்லது நடிகையோ நடிக்கும் திரைப்படம் வெளியாக போகிறது என்றால் அவர்கள் பல youtube சேனல்களுக்கு தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து வருகிறார்கள். இதுவும் ஒரு விளம்பர யுக்தியாகத்தான் காணப்படுகிறது. பல வருடங்களுக்கு பிறகும் அல்லது நமக்கு பிடித்த நடிகர்கள் அவர்களைப் பற்றி பல விஷயங்களை youtube சேனல்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை பூமிகாவும் தற்போது பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கிறார்.

பூமிகா நடிகர் விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். அதுபோல ஸ்ரீகாந்த் நடித்த ரோஜா கூட்டம் திரைப்படத்தில் இவருடைய கேரக்டர் யாராலும் அவளோ சீக்கிரமாக மறந்து இருக்க முடியாது. 90 கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல்களில் பூமிகா நடிப்பில் வெளியான ஆப்பிள் பெண்ணே நீ யாரோ பாடல் இடம் பிடித்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
அதிலும் சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு காதல் திரைப்படத்தில் ஐசுவாக வந்து பலரையும் ஃபீல் பண்ண வைத்தவர். ஆனால் சில வருடங்களாக அவர் தமிழில் பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் பிரதர் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அக்காவாக நடிக்கிறார்.
பிரதர் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா மோகன் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான பிரமோஷன் வேலைகள் படு பயங்கரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரதர் திரைப்பட அனுபவங்கள் குறித்து பூமிகா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் இந்த திரைப்படம் என்னுடைய நிஜ வாழ்க்கையோடு சம்பந்தம் உள்ளது.
எனக்கு நிஜத்தில் ஒரு சகோதரி இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். அதில் மூத்த சகோதரரோடு அடிக்கடி நாங்க போனில் பேசிக்கொள்ள மாட்டோம். அவங்க எப்போ பேசுறாங்களோ நானும் பேசுவேன். அப்போ பல விஷயங்களை பரிமாறி கொள்வோம். அதுபோலத்தான் இந்த படத்திலும் கதை இருக்கிறது.

ஆனால் ஜெயம் ரவி நிஜத்தில் கோபமே பட மாட்டார். ரொம்பவும் இனிமையானவர், அமைதியானவர் என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு ஜென்டில்மேன். அவருடன் விவிடி கணேஷ் சேர்ந்து சூட்டிங் இடைவெளிகளில் செஸ் விளையாடுவாரு. அதில் எப்போதுமே ஜெயம் ரவி தான் சாம்பியன். அவர் படப்பிடிப்பின் போது அதிகமா போன் பேசவே மாட்டாரு. ரொம்ப அமைதியா இருப்பாரு.
இப்போள்ள சூழ்நிலையில் 90% பசங்க போனில் தான் அதிகமாக டைம் ஸ்பென்ட் பண்றாங்க. ஆனா ஜெயம் ரவி அப்படி இல்ல. அது எனக்கு ரொம்ப வித்தியாசமா இருந்தது. நான் எப்போதுமே வித்தியாசமான கதை உள்ள படங்களில் தான் நடிக்க விரும்புகிறேன். அதுபோல நான் கொஞ்சம் தமிழ் படங்களில் நடித்திருக்கிறேன். இந்த பிரதர் படத்தையும் ரசிகர்கள் விரும்புவார்கள் என்று நினைக்கிறேன்.
இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக நடித்திருக்கிறேன். இந்த படத்தில் அப்படி நடித்ததால் தொடர்ந்து அதே போல கேரக்டரில் நடிப்பேன் என்று சொல்ல முடியாது. அது மட்டும் அல்லாமல் பொதுவாக எல்லோருடைய சக்ஸஸுக்கு அவர்களுடைய லைஃப் பார்ட்னர் தான் ரொம்ப முக்கியம். லைப் பார்ட்னர் மட்டும் தப்பா இருந்தா லைப்பே போயிடும் இருக்கிற ஒரு வாழ்க்கை தான் ஒருவருக்கொருவர் அன்பாகவும் புரிந்து கொள்ளும் விதமாகவும் நடந்தால் வாழ்க்கையில் எந்த பிரச்சனையையும் வராது என்றும் மேலும் பல விஷயங்களையும் அந்த பேட்டியில் பூமிகா பகிர்ந்து இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications