நடிகை சைத்ரா திடீரென வெளியிட்ட பதிவு.. என் விதி! இப்படி ஆகும்னு நினைக்கல..! எமோஷனல் வார்த்தை!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை சைத்ரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பலரையும் வியக்க வைத்திருக்கிறது. தன்னுடைய 10 வருட சினிமா பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து திடீரென சைத்ரா ரெட்டி போஸ்ட் போட்டிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஒரு சில நடிகைகளுக்கு தான் சீரியலில் நடித்தாலும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு இருப்பது போன்று ரசிகர்கள் இருக்கின்றார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை சைத்ரா ரெட்டி. சைத்ரா தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிகை பிரியா பவானி சங்கருக்கு பதிலாக நடிக்க தொடங்கி இருந்தாலும் முதல் சீரியலிலேயே இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்தனர்.

பொதுவாக நடிகைகள் ஒரு சீரியலில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிவிட்டால் தொடர்ந்து அது போன்றே கேரக்டரில் நடிக்க விரும்புவார்கள். ஆனால் சைத்ரா மட்டும்தான் முதல் சீரியலில் கதாநாயகியாக நடித்துவிட்டு அதைத் தொடர்ந்து வில்லியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு யாரடி நீ மோகினி சீரியல் வில்லியாகவும் நடித்திருந்தார். அந்த நேரத்தில் தான் நடிகர் அஜித்துடன் வலிமை படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்க அந்த படத்திலும் நடித்திருந்தார்.
அதுபோல அந்த நேரத்திலேயே கயல் சீரியலிலும் பட்டி தொட்டி எல்லாம் ரசிகர்களை உருவாக்கி விட்டது. இப்போது இந்த சீரியலில் கயலுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமணம் நடக்குமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்போடு மக்கள் இருக்கின்றனர். இந்த நேரத்தில் சைத்ரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட ஒரு பதிவு போட்டு இருக்கிறார். அது அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.

அதில், இந்த நம்ப முடியாத தொழில் துறையில் எனது 10 வருட பயணத்தை நான் திரும்பிப் பார்க்கும்போது என் இதயம் மிகுந்த நன்றியுடன் மகிழ்ச்சியுடனும் நிரம்பியுள்ளது. எனது வாழ்க்கையை வடிவமைப்பதில் இயக்குனர்களின் தொலைநோக்கு பார்வையும், வழிகாட்டுதலும் கருவியாக இருந்த ஒளிப்பதிவாளர்கள் ஒவ்வொரு காட்சியின் சாரத்தையும் படம் பிடித்து காட்டுகிறார்கள். ஒவ்வொரு திட்டத்தையும் நம்பும் தயாரிப்பாளர்களுக்கு, ஒப்பனை கலைஞர்கள் மற்றும் ஒப்பனையாளர்களுக்கு அவர்கள் நம் தோற்றத்தை மாற்றி அமைத்து உயர்த்துகிறார்கள்.

எனது சக நடிகர்களுக்கு அவர்களின் திறமையையும் தோழமையும் எனது அனுபவத்தை வளப்படுத்தியது. மற்ற அனைத்து அர்ப்பணிப்பு உள்ள குழு உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உங்களின் அயராத அர்ப்பணிப்பும் ஆர்வமும் ஒவ்வொரு கனத்தையும் சாத்தியமாக்கி உள்ளது. எனது குடும்பமாக இருக்கும் எனது ரசிகர்களுக்கு சிறப்பு நன்றி. உங்கள் நிலையான ஆதரவு அன்பும் என்னை ஒவ்வொரு உயர்வுக்கும் தாழ்வுக்கும் கொண்டு சென்றன.
19 வயதில் இந்த பயணத்தை தொடங்கி, இந்த விதி எனக்காக திட்டமிடப்பட்டது என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் படிப்படியாக உங்கள் அன்பு என்னை எங்கு கொண்டு வந்துள்ளது. இந்த கனவை அழகாக நினைவாக்கிய அனைவருக்கும் என் இதயத்தில் இருந்து நன்றி. வெற்றி ஒரு இலக்கு அல்ல அது ஒரு பயணம் இந்த கருத்தில் கொண்டு இந்த நம்ப முடியாத வேலையை தொடர ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நான் இன்னும் கடினமாக உழைத்து உங்கள் ஒவ்வொருவரையும் மகிழ்வித்து ஊக்கப்படுத்துவேன் என்று உறுதி அளிக்கிறேன். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என்று தன்னுடைய 10 வருட சினிமா பயணத்தை ரசிகர்களோடு சைத்ரா ரெட்டி பகிர்ந்து இருக்கிறார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications