கர்ப்பிணினு கூட பார்க்காம.. காலை தூக்கி போட்டு.. கயல் சீரியல் நடிகை அட்ராசிட்டி! பாவம் நட்சத்திரா
சென்னை: நிறைமாத கர்ப்பணிக்கு தொல்லை கொடுக்கும் கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் வீடியோ வைரலாகி வருகிறது. பதிலுக்கு அந்த கர்ப்பிணி "தர்ம அடி " கொடுத்துள்ளார்.
ஜீ தமிழ் சேனலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் யாரடி நீ மோகினி . இதில் வெண்ணிலா எனும் அப்பாவி பெண் கேரக்டரில் நடித்திருப்பவர் நட்சத்திரா. இவர் கலர்ஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நட்சத்திரா ஜீ தமிழ் சேனல்லில் சீரியல்களின் தயாரிப்பு நிர்வாக பணிகளை மேற்கொண்டு வரும் விஸ்வநாதனை காதலித்து வந்துள்ளார். இவர் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ குடும்பத்திற்கு நெருக்கமானவர் ஆவர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் திடீரென திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் குறித்து நட்சத்திராவின் தோழி நடிகை ஸ்ரீ நிதி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் விஸ்வநாதன், நட்சத்திராவை கடத்தி திருமணம் செய்து கொண்டார், அவருடைய உயிருக்கே ஆபத்து என்றெல்லாம் பதிவிட்டிருந்தார்.
இதை நட்சத்திரா பகிரங்கமாக மறுத்தார். தாத்தா உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருவதாகவும் அவருக்கு தன்னை திருமணம் கோலத்தில் பார்க்க விருப்பப்பட்டதாகவும் அதனால்தான் நானும் விஸ்வாவும் ஒரு கோயிலில் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம் என்றும் நட்சத்திரா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நட்சத்திரா அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதற்கு அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறினர். இந்த நிலையில் நட்சத்திராவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வளைகாப்பு நடந்தது. இந்த விழாவில் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகை சைத்ரா ரெட்டி கலந்து கொண்டு தனது தோழியை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார்.
யாரடி நீ மோகினி சீரியலில் நடித்தது முதல் சைத்ராவும் நட்சத்திராவும் தோழிகள். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நட்சத்திராவை சைத்ரா ரெட்டி படாதபாடு படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து இருவருமே இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்கள்.
அதில் நட்சத்திரா வயிற்றை சாய்த்து கொண்டு கஷ்டப்பட்டு நடக்கிறார். இதை பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. ஆனால் சைத்ரா ரெட்டியோ அவரை அப்படியே இமிடேட் செய்கிறார். தத்தி தடுமாறி சோபாவில உட்கார நட்சத்திரா செல்லும் போது கர்ப்பிணிக்கு தாராளமாக இடம்விடாமல் ஓடி போய் இவர் உட்கார்ந்து கொள்கிறார்.
பின்னர் நட்சத்திரா உட்காருகிறார். அவர் காது அருகே ஏதோ கடக் கடக் என கடித்து சாப்பிட்டு அவரை வெறுப்பேற்றுகிறார். சரி டயர்ட்டாக இருக்கிறதே என நினைத்து கட்டிலில் ஓய்வெடுக்கலாம் என செல்கிறார் நட்சத்திரா. அப்போது அவர் படுக்கும் இடத்தில் இருந்த தலையணைகளை பக்கத்தில் வைக்கிறார். உடனே சைத்ரா ரெட்டி அந்த தலையணைகளை எடுத்து அவர் மீது போட்டு இவர் படுத்துக் கொள்கிறார்.

இருவரும் பெட்ஷீட்டை போர்த்தி கொள்கிறார்கள். அப்போது சைத்ரா ரெட்டி செய்யும் சேட்டைகளை பார்த்து கடுப்பாகும் நட்சத்திரா மீது காலை தூக்கி போட்டதும் சரமாரியாக சைத்ராவை செல்லமாக அடிக்கிறார். இந்த வீடியோவை பதிவிட்ட சைத்ரா.. உங்கள் தோழி கர்ப்பிணியாக இருக்கும் போது இதெல்லாம் விளையாட்டுக்காக.. நட்சத்திரா கர்ப்பிணியாக இருப்பதை பார்ப்பதற்கு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications