அஜித் இப்படின்னு நினைக்கல.. சூட்டிங் ஸ்பாட்டில் வேணும்னே செய்த வேலை.. கயல் சீரியல் சைத்ரா ஓப்பன் அப்
சென்னை: சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித்தோடு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் அஜித் பற்றி சைத்ரா பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் பல திரைப்படங்களில் நடித்த அனுபவம் உள்ள அஜித்குமார் தனக்காக சூட்டிங் ஸ்பாட்டில் செய்த செயல் குறித்து நெகிழ்ச்சியோடு சைத்ரா பேசியிருக்கிறார்.

சைத்ராவிற்கு சில இடங்களில் நடிக்க முடியாமல் திணறிய போது அவருக்காக நடிகர் அஜித் தப்பாக நடித்து பல டேக் வாங்கி இருக்கிறாராம். அதைப்பற்றி அன்று நடந்த நிகழ்வு குறித்து சைத்ரா விளக்கி இருக்கிறார்.
நடிகை சைத்ரா ரெட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் மூலமாக தமிழ் சின்ன திரையில் அறிமுகம் ஆகி அதை தொடர்ந்து யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வில்லியாக நடித்து பிரபலம் அடைந்திருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான வலிமை திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் சைத்ரா நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் தான் வலிமை திரைப்படத்தில் நடிக்கிறேன் என்பதை ரகசியமாகவே வைத்திருந்த சைத்ரா பிறகு திரைப்படம் வெளியாகும் சமயத்தில் தான் அந்த ரகசியத்தை அம்பலப்படுத்தி இருந்தார். ட்ரெய்லரில் சைத்ராவை பார்த்ததும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை பொழிந்து வந்தனர்.
இப்படியான நிலையில் தற்போது வலிமை படத்தில் நடித்திருக்கும் போது நடிகர் அஜித்தோடு நடிக்கும்போது அவரை ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அதில் சைத்ராரட்டி பேசுகையில், அஜித் சாரை நான் முதல்முறையாக பார்த்த போது நான் ஹாய் சார் சொன்னவுடன் அவரும் ஹாய் சொன்னார்.
என்னை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டேன். உடனே முதல் முறை நாங்கள் எங்கே சந்தித்தோமோ அந்த இடம் நேரம் மாறாமல் அப்படியே கூறினார். அது எனக்கு வியப்பாக இருந்தது. நான் படப்பிடிப்பில் சில காட்சிகளில் தவறு செய்து விட்டேன். அதனால் நான்
மிகவும் சோகமாக இருந்தேன். ஆனால் அஜித் சார் என்னிடம் வந்து படப்பிடிப்பு தளத்தில் தவறுகள் நிகழ்வதெல்லாம் சாதாரணம். இதற்காக நீங்கள் கஷ்டப்பட வேண்டியது கிடையாது என்று ஆறுதல் கூறினார்.

அதோடு நிற்காமல் வேண்டுமென்றே சில காட்சிகளில் அஜித் சாரும் தவறாக நடித்தார். பிறகு என்னிடம் வந்து பாருங்கள் நான் எத்தனை படங்களில் நடித்திருக்கிறேன். எனக்கும் சில நேரங்களில் தவறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறி சிரித்தார். எனக்கு அவர் பேசியதை பார்த்து சிரிப்பு வந்துவிட்டது. சார் நீங்கள் வேண்டும் என்று தானே இப்படி தவறாக செய்தீர்கள். நீங்க தவறாக நடிக்கக்கூடிய ஆள் கிடையாது. அது எனக்கு தெரியும் என்று கூறினேன்.
அவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கும் நடிகர் தன்னுடன் நடிக்கும் நடிகர்களை அவ்வளவு அன்பாக பார்த்துக் கொள்கிறார். இது எல்லாம் அஜித் சார் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது. ஆனாலும் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதையை நான் அப்போது கற்றுக் கொண்டேன் என்று சைத்ரா பேட்டி அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications