நான் செத்துப் போயிட்டேன்னு சொல்லிட்டாங்க.. உறவினர்களுக்கு கூட.. நடிகை தீபா வெங்கட் எமோஷனல்
சென்னை: 90ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவரான தீபா வெங்கட் பல வருடங்கள் கழித்து தன்னுடைய தற்போதைய நிலை குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அத்தோடு சில வருடங்களுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட சோகங்கள் மற்றும் மன கவலைகள் குறித்தும் அதில் பேசியிருக்கிறார்.

அதே நேரத்தில் தான் இப்போது டப்பிங் கலைஞராக இருக்கும் நேரத்திலும் தன்னை பற்றி வந்த வதந்திகள் குறித்து தீபா வெங்கட் விளக்கம் கொடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பல நடிகைகள் சில வருடங்கள் கழித்து எங்கே போனார்கள் என்று தெரியாமல் போய்விடுகின்றனர். அந்த மாதிரிதான் 90ஸ் ஃபேவரைட் சீரியல் நடிகை ஆக இருந்த தீபா வெங்கட் தற்போது எங்கே போனார் என்று ரசிகர்கள் தேடி வருகின்றனர். அவர் நடித்த சீரியல்களின் கிளிப்சுகளை பார்க்கும்போதெல்லாம் ரசிகர்கள் ஏன் இவர் மீண்டும் சீரியலில் நடிக்காமல் போய்விட்டார் என்று தங்களுடைய வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.
ஆனால் நடிகை தீபா வெங்கட் நடிகையாக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் ஹலோ எஃப் எம்மில் சென்னையில் ரேடியோ ஜாக்கி ஆக இருந்த இவர் 80க்கும் மேற்பட்ட சீரியல்களில், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் நடிகை சிம்ரன், சினேகா, ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா செட்டி, காஜல் அகர்வால்,, ஐஸ்வர்யா ராய் பச்சன் போன்ற பல நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் தமிழக அரசால் இவர் கலை மாமணி விருதும் வாங்கி இருக்கிறார்.
தீபா வெங்கட் முதல் முறையாக அப்பு என்ற திரைப்படத்தில் நடிகை தேவயானிக்காக டப்பிங் பேசி தான் தன்னுடைய டப்பிங் வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மயக்கம் என்ன திரைப்படத்தில் ரிச்சா காங்கோபத்க்காக இவர் டப்பிங் பேசியதற்காக இவருக்கு நார்வே தமிழ் திரைப்பட விருதும், இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நயன்தாராவிற்காக சிறந்த டப்பிங் கலைஞராகவும் விருதுகள் வாங்கி இருக்கிறார்.

இந்த விருதுகள் மட்டுமல்லாமல் இன்னும் பல விருதுகள் வாங்கி குவித்து இருக்கிறார். இந்த நிலையில் தான் இவர் ஐடி துறையில் பணிபுரியும் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. சமீபத்தில் இவர் அதிகமான திரைப்படங்களிலோ சீரியலிலோ நடிக்கவில்லை. அதே நேரத்தில் டப்பிங்கில் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.
அப்போது நான் சமூக வலைத்தளத்தில் பார்த்து அதிர்ச்சியான வதந்தி என்றால் நான் கொரோனாவில் இறந்து போய்விட்டேன் என்று சில youtube இல் வீடியோ வெளியிட்டு இருந்தனர். என்னுடைய புகைப்படத்தை வைத்து இரண்டு பெண்கள் மார்பில் அடித்துக்கொண்டு அழுவது போன்று கண்ணீர் இமேஜிங் வைத்து எனக்கு கண்ணீர் அஞ்சலி என்று சிலர் வீடியோ போட்டு விட்டனர். அதை பார்த்து என்னுடைய அம்மா அப்பா உறவினர்கள் கூட ரொம்பவே வருத்தப்பட்டார்கள்.
அவர்களுக்கு அது எவ்வளவு வலியை ஏற்படுத்தி இருக்கும். இந்த மாதிரி ஒரு வீடியோவை எதற்கு செய்கிறார்கள் என்று எனக்கு இப்போதும் தெரியவில்லை. இது நான் வெறுத்த ஒரு செயல் என்று அந்த பேட்டியில் தீபா வெங்கட் பேசியிருக்கிறார். இது குறித்து அதிகமான ரசிகர்கள் இவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications