ஆறு வருஷம் ஆச்சு..ஆனால் இதுவரை இப்படி இல்ல.. திருமணத்திற்கு பிறகு தீபிகா வெளியிட்ட வீடியோ
சென்னை: கனா காணும் காலங்கள் தீபிகாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் முடிவடைந்தது.
தன்னோடு அந்த சீரியலில் நடித்த ராஜா வெற்றி பிரபுவை வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்திருந்தார்.
இந்த நிலையில் ஹனிமூனில் இருந்தபடியே அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த தீபிகா சமூக வலைத்தளத்திலும் பிரபலம் தான். instagram மூலமாக ஏற்கனவே பல வீடியோக்களை வெளியிட்டு வந்த தீபிகாவிற்கு அதன் மூலமாகத்தான இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது.
இந்த நிலையில் 90ஸ் கிட்ஸ்களுக்கு ஃபேவரைட் விஜய் டிவி கனா காணும் காலங்கள் சீரியல் என்றால் இப்போ இருக்கிற 2 கே கிட்ஸ்களின் ஃபேவரைட் என்றால் அது டிஸ்னி ஹாட்ஸ்டார் கனா காணும் காலங்கள் சீரியல் தான். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பலரும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் அபி கேரக்டரில் நடிக்கும் தீபிகாவிற்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

சமீபத்தில் தான் அவர் காதலிக்கும் விஷயத்தை சமூக வலைத்தளத்தில் போட்டு உடைத்து இருந்தார். இன்பமோ துன்பமோ அதை instagramல் பகிர்ந்து கொள்ளும் பிரபலங்கள் வரிசையில் இவரும் ஒருவர். அந்த வரிசையில் தான் பல வருடங்களாக நண்பராக இருக்கும் ஒரு நபரை தான் காதலித்துக் கொண்டிருக்கிறேன். அந்த நபர் யார் என்பது விரைவில் தெரியும் என்று சர்ப்ரைஸோடு தன்னுடைய காதல் ரகசியத்தை மட்டும் உடைத்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து தன்னுடைய திருமணம் நாளும் நெருங்கி விட்டது என்று தெரிவித்து வந்த தீபிகா தன்னுடைய நிச்சயதார்த்தன்று தான் ராஜா வெற்றி பிரபுவை தான் திருமணம் செய்ய போகிறேன் என்று உண்மையை உடைத்து இருந்தார். தற்போது இவர்களுடைய திருமணமும் முடிவடைந்தது இந்த ஜோடி ஹனிமூனில் என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

அங்கே இருக்கும் போதும் தங்களுடைய திருமண புகைப்படங்கள் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வந்து கொண்டிருந்த தீபிகா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் ஆறு வருடம் ஆகிறது இன்ஸ்டாகிராம் ஓபன் செய்து. இதுவரைக்கும் நான் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டது கிடையாது. ஆனால் இப்போது முதல்முறையாக வெளியிட்டு இருக்கிறேன்.
இந்த சாப்பாடு அந்த அளவிற்கு அழகாக இருக்கிறது. நான் ஏழு வகையான சாப்பாடு ஆர்டர் பண்ணி இருந்தேன். அதில் ஏதாவது குறை இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் ஒன்று கூட குறை இல்லை. அவ்வளவு அழகாக இருக்கிறது என்று இவர் சாப்பாடு ரிவ்யூ செய்து சர்டிபிகேட்டோடு வீடியோ வெளியிட்டு, அது மட்டுமல்லாமல் தான் தங்கி இருக்கும் அறை முதல் நீச்சல் குளம் என ஹனிமூன் சென்ற இடத்தின் அழகையும் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.
-
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
வேடன் விவகாரம்... அமைச்சர் சந்திப்பால் மீண்டும் வெடித்த சர்ச்சை! சின்மயி கேள்விக்கு ரசிகர்கள் சொல்வது என்ன? -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications